சாண்டி மற்றும் சரவணன் இருவரையும் ஏமாற்றிய கவின்.! இவர் பொண்ணுங்க சைடு போல.!

0
5860
- Advertisement -

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சரவணன் மற்றும் சாண்டி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சாண்டி சைக்கிளை பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்கிறார். அதற்கு சரவணன் ‘அவர் பெரிய இந்த டைரக்டர்னு நெனப்பு. அந்த நினைப்பை எல்லாம் இங்கே எடுத்து வரகூடாது’ என்றார். பின்னர் தான் தெரிந்தது சைக்கிள் என்றால் சேரனின் பட்டப்பெயர் என்று.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவர்களிடம் கவின் வருகிறார். அவரிடமும் சைக்கிளை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று சாண்டி கேட்கிறார். அதற்கு கவின் ‘அனுசரித்து போதல் அனைவருடன் அது சுத்தமாக இல்லை. தான் தான் பெரியன் என்ற எண்ணம் இருக்கிறது’ என்றார். சரவணன் மற்றும் சாண்டி இருவருமே சேரனை நாமினேட் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தனர்.

இதையும் பாருங்க : துவங்கியது இந்த வார ஓட்டிங்.! யார்? யாரை?நாமினேட் செய்தார்கள் தெரியுமா.!

- Advertisement -

பிக் பாஸ் நாமினேஷன் பிராசஸ் துவங்க போகிறது என்று சொன்ன போதும் கவினை பாத் ரூமிற்கு தனியாக அழைத்து சென்ற சாண்டி அங்கேயும் ‘அந்த சின்னம்(சைக்கிள்) தானே ‘ என்று கவினிடம் கேட்டார். அப்போதும் கவின் ஆமா என்று தான் தலையாட்டினார். பின்னர் நாமினேஷன் அறைக்கு சென்ற சரவணன் மற்றும் சாண்டி இருவரும் பேசியது போலவே சேரனை நாமினேட் செய்தனர்.

ஆனால், கன்பெஷன் ரூமிற்கு சென்றதும் அந்தர் பல்டி அடித்த கவின், மீரா மற்றும் மதுமிதாவின் பெயரை கூறிவிட்டார். இவர் கூறியதற்கு முக்கிய காரணமே இவர்கள் இருவர் தான் கவினுக்கு நெருக்கமாக இருக்கும் அபிராமி மற்றும் சாக்க்ஷகு பிடிக்காதவர்களாக இருப்பதால் இவர்களின் பெயரை நாமினேட் செய்தார் கவின்.

-விளம்பரம்-

சரவணன் மற்றும் சாண்டி, சேரனை நாமினேட் செய்ய வேண்டும் என்ற போது சேரனை பற்றி கொஞ்சம் அதிருப்தியாக பேசிவிட்டு அவரை நான் நாமினேட் செய்து விடுகிறேன் என்று கூறினார் கவின். ஆனால், கண்பெஷன் ரூமில் சேரனின் பெயரை சொல்லவில்லை. உண்மையில் சேரனை நாமினேட் செய்ய விருப்பமில்லை என்றால் அதனை சரவணன் மாற்றம் சாண்டியிடம் நேரடியாக கூறி இருக்கலாம். அதை விட்டுவிட்டு சரவணன் மற்றும் சாண்டிக்கு நல்லவராக நடித்து விட்டு பின்னால் சென்று ஏமாற்றியுள்ளார் கவின்.

Advertisement