முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ (காலேஜ் வெர்ஷன்) சீரியலில் நடிகராக அறிமுகமானவர் கவின். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘தாயுமானவன், சரவணன் மீனாட்சி’ ஆகிய இரண்டு சீரியல்களிலும் நடித்தார் கவின். தமிழ் சினிமாவில் வெளி வந்த ‘மக்கள் செல்வன்’விஜய் சேதுபதியின் ‘பீட்சா’ மற்றும் விஷ்ணு விஷாலின் ‘இன்று நேற்று நாளை’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் மிக சிறிய ரோலில் நடித்திருந்தார் கவின்.
இதனைத் தொடர்ந்து விக்ரம் பிரபுவின் ‘சத்ரியன்’ படத்தில் ‘சந்திரன்’ என்ற கதாபாத்திரத்தில் வலம் வந்திருந்தார். ‘சத்ரியன்’ படத்துக்கு பிறகு கவின் ஹீரோவாக களமிறங்கினார். அந்த படம் தான் ‘நட்புனா என்னான்னு தெரியுமா’. இந்த படத்தினை இயக்குநர் சிவா அரவிந்த் இயக்கியிருந்தார். இதில் கவினுக்கு ஜோடியாக பிரபல நடிகை ரம்யா நம்பீசன் நடித்திருந்தார்.
இதையும் பாருங்க : சட்டையை விலக்கிவிட்டு கிளாமரில் தூக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரியா வாரியர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ என்ற ரியாலிட்டி ஷோவின் சீசன் 3-யில் நடிகர் கவினும் ஒரு போட்டியாளராக இருந்தார். ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவிற்கு பிறகு நடிகர் கவினுக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது,
திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது.
இதையும் பாருங்க : வறுமையில் வாடிய பில்லா 2 நடிகர் – நேரில் சென்று சந்தித்து உதவி செய்த முதல் பிக் பாஸ் பிரபலம்.
இந்நிலையில், கவின் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ பதிவில் கவின் அவரது வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார். இவ்வீடியோ குறித்து கவின் பதிவிட்ட ஸ்டேட்டஸில் “சில ஆண்டுகளுக்கு முன்பு, அரசின் ஆர்டர்லாம் இல்லாமல் நானே என்னை தனிமை படுத்திக் கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ இது” என்று தெரிவித்திருக்கிறார்.