என்ன அப்படியே லாஸ்லியா மாதிரி இருகாங்க – வைரலான ரியாலிட்டி ஷோ போட்டியாளரின் வீடியோ.

0
647
- Advertisement -

பிக் பாஸ் லாஸ்லியா போலவே இருக்கும் பெண்ணின் வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதனால் வித்தியாசமான கான்செப்டில் புதுப்புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் யார் அடுத்த கதாநாயகி. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கே எஸ் ரவிக்குமார், ராதிகா சரத்குமார் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

விஜய் டிவியில் சிங்கர், டான்ஸ் நிகழ்ச்சி இருப்பது வழக்கம். ஆனால், தற்போது கதாநாயகி தேடும் பயணத்தையும் தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை நன்றாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

கதாநாயகி:

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் தான் ஜனனி பாலசுப்பிரமணியம். இவர் பார்ப்பதற்கு அப்படியே லாஸ்லியா மாதிரியே இருக்கிறார். பலருமே இவர் தான் பிக் பாஸ் லால்லியா என்று நினைத்துக் கொண்டார். அதோடு லாஸ்லியா கதாநாயகி நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் பேசியிருந்தார்கள். ஆனால், உண்மையில் கதாநாயகி நிகழ்ச்சியில் கலந்து இருப்பது லாஸ்லியா கிடையாது ஜனனி பாலசுப்ரமணியம்.

பிக் பாஸ் லாஸ்லியா

தற்போது ஜனனி பாலசுப்ரமணியம், லாஸ்லியா புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் போட்டு வருகிறார்கள். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் தமிழக இலங்கை நாட்டின் செய்தி தொகுப்பாளராக பணியாற்றியவர். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

-விளம்பரம்-

லாஸ்லியா திரைப்பயணம்:

அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. மேலும், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது இவரை குறித்து காதல் கிசுகிசு சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். லாஸ்லியா ‘பிரின்ட்ஷிப்’ படத்தில் நாயகியாக அறிமுகமானார். ஆனால், எதிர்பார்த்தபடி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

ஒல்லியாக மாறிய லாஸ்லியா:

இதை தொடர்ந்து கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ‘கூகுள் குட்டப்பன்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். மலையாளத்தில் ‘ஆண்ட்ரியட் குஞ்சப்பன்’ என்ற பெயரில் வெளியான இந்த படம் மலையாளத்தில் மாபெரும் வெற்றியடைந்தது. ஆனால், தமிழில் இந்த படம் மாபெரும் தோல்வியை தழுவியது. தற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் லாஸ்லியா சமீபகாலமாக படு ஸ்லிம்மாக மாறி இருக்கிறார். அதோடு பிக் பாஸில் இருந்த லாஸ்லியாவிற்கும் தற்போது இருப்பதற்கும் ஏகப்பட்ட வித்யாசம்.

Advertisement