அரசியலில் கேப்டன் பாணியை பாலோ பண்ணும் விஜய் – விரைவில் துவங்கப்போகும் விஷயம். என்ன தெரியுமா ?

0
1486
- Advertisement -

நடிகர் விஜய் புதிதாக நியூஸ் சேனல் தொடங்குகிறார் என்ற சர்ச்சைக்கு விஜய் சார்பில் கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சில ஆண்டுகளாகவே விஜய்யின் அரசியல் குறித்த செய்தி தான் சோசியல் மீடியாவில் உலா வந்து கொண்டு இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இவருக்கு விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. இதனால் விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம்:

விஜயின் இந்த செயலை பார்த்து அரசியல் பிரபலங்கள் கதிகலங்கி இருக்கிறார்கள். மேலும், இவர் சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார். பின் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த காமராசர் அவர்களின் பிறந்த நாள் அன்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இலவசமாக இரவு நேர பயிலகத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு படிப்புக்கு உதவிகளை செய்து வருகிறார்கள்.

விஜய் அரசியல்:

இதன் மூலம் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் விஜய் அவர்கள் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து அடிக்கடி கூட்டம் நடத்தி ஆலோசனை வழங்கி வருகிறார். இப்படி விஜய் செய்து கொண்டிருப்பதெல்லாம் அரசியல் வருவதற்காக தான் என்று அரசியல் தலைவர்கள் மட்டுமில்லாமல் சினிமா பிரபலங்களுமே கூறி வருகிறார்கள். சமீபத்தில் கூட விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் சென்னை பனையூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

-விளம்பரம்-

நியூஸ் சேனல்:

அதில் அவர்கள் தொழில்நுட்ப சமூக வலைத்தளங்களில் வெளிவரும் மெசேஜ்கள் குறித்து பேசிருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் ஜாதி, மதம், ஆபாசம் குறித்து வரும் மெசேஜ்களை பரப்ப கூடாது என்றெல்லாம் விஜய் சார்பில் புஸ்ஸி ஆனந்த் அட்வைஸ் செய்திருந்தார். இந்த நிலையில் விஜய் புதிதாக நியூஸ் சேனல் தொடங்க இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக அரசியல் கட்சிகள் அனைத்துமே தங்களுக்கு சொந்தமாக ஒரு செய்தி சேனலை வைத்திருக்கிறார்கள். அதுபோக புதிதாக அரசியலுக்கு வரும் பலரும் தொலைக்காட்சி சேனலை ஆரம்பிக்கவே முயற்சி செய்வார்கள்.

Vijay

விஜய் சார்பில் கொடுத்த விளக்கம்:

கேப்டன் விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது கூட கேப்டன் தொலைக்காட்சியை ஆரம்பித்தார். ஆனால், அவருக்கு பின்னர் வந்த ரஜினிகாந்த், கமல் போன்ற யாருமே தனியாக தொலைக்காட்சியை ஆரம்பிப்பதை பற்றி யோசிக்கவில்லை. தற்போது விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே எப்படியாவது தொலைக்காட்சியை ஆரம்பித்து விட வேண்டும் என்று முயற்சி காட்டுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதற்கு விஜய் தரப்பில் மறுத்து இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இந்த தகவல்கள் எல்லாம் உண்மை இல்லை என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

Advertisement