இறப்பதற்கு முன் லாஸ்லியாவுடன் வீடியோ காலில் பேசியுள்ள தந்தை – ஷாக்கிங் வீடியோ.

0
42895
los
- Advertisement -

முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்துள்ள சம்பவம் லாஸ்லியா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் முகேன், தர்ஷன், லாஸ்லியா என்று ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அதில் மிகவும் பிரபலமடைந்தது என்னவோ லாஸ்லியா தான். இலங்கை செய்தி வாசிப்பாளரான இவர் பிக்பாஸ் வீட்டில் கலந்துகொண்ட 24 மணி நேரத்திலேயே இவருக்கென்று பல ஆர்மி கூட துவங்கப்பட்டது கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவிஞர் மற்றும் லாஸ்லியாவின் காதல் தான் மிகவும் லைட் ஆக இருந்து வந்தது.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் freeze டாஸ்க்கின் போது லாஸ்லியாவை சந்திக்க அவரது தந்தை பிக் பாஸ் வீட்டிற்குள்சென்று இருந்தார். 10 வருடங்கள் கழித்து தனது தந்தையை கண்ட சந்தோசத்தில் லாஸ்லியா கண்ணீர் விட்டு அழுதார் லாஸ்லியா. ஆனால், ககவின் விஷயத்தில் லாஸ்லியா நடந்து கொண்ட விதத்தால் கடுப்பான லாஸ்லியாவின் தந்தை, இதற்காகவா உன்னை அனுப்பினேன். என்னை அனைவரும் காரிதுப்பும்படி செய்துவிட்டாய் என்று கடுமையாக பேசி இருந்தார். ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் விளையாடுங்கள் என்று அறிவுரை கூறி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் லாஸ்லியாவின் தந்தை.இப்படி ஒரு நிலையில் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி இரவு கன்னடா நாட்டில் இவர் மாரடைப்பு காரணமாக இருந்துள்ளார்.

- Advertisement -

லாஸ்லியாவின் தந்தை கனடா நாட்டில் தான் வேலை செய்து வருகிறார் என்பது பலரும் அறிந்த ஒன்று. இப்படி ஒரு நிலையில் லாஸ்லியாவின் தந்தை இறந்த பின்னர் அவரது சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் வீடியோ எடுத்துள்ளார்கள். அந்த வீடியோவில் பேசும் அவரது நண்பர்கள் சிலர் ‘நேற்று கூட என்னிடம் போனில் பேசினார் 2 மணிக்கு வேலையை முடித்துவிட்டு வந்து படுத்தார். பின்னர் ஆறு மணிக்கு போன் செய்தபோது எடுக்கவில்லை இதனால் பயந்து போய் இங்கே வந்து பார்த்தால் அவர் இறந்து கிடக்கிறார் என்று கூறியுள்ளார்கள்.

மேலும், அந்த வீடியோவில் அவரது உடலுக்கு அருகிலேயே tab ஒன்று கூட இருந்தது. எனவே, அவர் இறப்பதற்கு சில மணி நேரம் முன்பாக யாருடானாது வீடியோ காலில் பேசி இருக்கலாம் என்று நினைக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இதனை உறுதி செய்யும் விதமாக பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதா, பேசுகையில் ‘ லாஸ்லியாவின் அப்பா இறுதியாக லாஸ்லியாவிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை. நன்றாக தான் இருந்துள்ளார். அதன்பின்னர் அவரது உறவினர் ஒருவர் போன் செய்தபோது எடுக்கவில்லை. பின்னர் அவர் கனடாவில் உள்ள மற்றொரு உறவினருக்கு கூறி அவரை சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார்

-விளம்பரம்-

Advertisement