அண்ணன்னு சொல்லிட்டு இப்படி நடிக்கலாமா ? விமர்சனங்ககளுக்கு லாஸ்லியா கொடுத்த பதில்.

0
2226
los
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த சீசனில் லாஸ்லியா, கவின், முகேன், தர்ஷன், சாண்டி ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து பாடல்கள் பாடுவது, நடனம் ஆடுவது போன்ற பல என்டர்டைன்மெண்ட் செய்து வந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது லாஸ்லியா தான். இலங்கை செய்தி வாசிப்பாளராக தான் இவர் பிக்பாஸ் வீட்டில் கலந்துகொண்டார். பின் சினிமா பிரபலம் போல் இவருக்கென்று பல ஆர்மி கூட துவங்கப்பட்டது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-237-1024x581.jpg

பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா தனது இலங்கை தமிழ் பேச்சாலும், குறும்புத்தனத்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். தற்போது லாஸ்லியாவுக்கு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், லாஸ்ஸியா இணைந்து ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இதனை அடுத்து மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் தர்சனுடன் இணைந்து லாஸ்லியா நடித்துள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதில் தர்ஷன் மற்றும் லாஸ்லியா இணைந்து மிகவும் நெருக்கமான காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதனை பார்த்த சிலர் பிக்பாஸில் அண்ணன், தங்கையாக பழகி வந்தார்கள். ஆனால், இப்போது இதுபோன்ற காட்சிகளில் எப்படி நடிக்க முடிந்தது? என லாஸ்ஸியா குறித்து பல விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். நடிகை லாஸ்ஸியா தன் மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 2-76-1024x568.jpg

அதில் அவர் கூறியது, தர்ஷன் எனக்கு அண்ணன் மாதிரி தான்.படத்தில் வரும் ரொமாண்டிக் காட்சிகள் வெறும் நடிப்பு மட்டுமே. யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒரு படத்தை படமாக மட்டும் பாருங்கள் நிஜ வாழ்க்கையில் எதையும் ஒப்பிடாதீர்கள். அந்த காட்சி எடுக்கும் போது நாங்கள் இருவருமே சிரித்துக்கொண்டே செம ஜாலியாக தான் எடுத்து முடித்தோம். இது வெறும் நடிப்புதான் எனக் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement