கவினின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில் லாஸ்லியா போட்டுள்ள இன்ஸ்ட்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்ந்து வருகிறார். இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதற்கு பிறகு தன்னுடைய நண்பர்களின் குறும் படங்களில் நடிக்க தொடங்கினார். அதன் மூலம் இவர் கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடிகராக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்தார். பின்பு 2017 ஆம் ஆண்டு வெளிவந்த சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் கவின் நுழைந்தார். பிறகு இவர் 2019 ஆம் ஆண்டு நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படம் மூலம் கதாநாயகனாக சினிமாவில் தடம் பதித்தார். இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
இப்படி ஒரு நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதே சீசனில் இவருக்கு லாஸ்லியாவிற்கும் காதல் மலர்ந்தது. அந்த சீசன் ஹிட் அடித்ததற்கு இவர்களின் காதலும் ஒரு காரணம் தான். ஆனால், இவர்கள் காதலை இருவருமே வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்தனர். இருப்பினும் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் எல்லாம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடைசிவரை இவர்கள் தங்கள் காதலை ஒப்புக் கொள்ளவும் இல்லை. மேலும், இருவருமே தங்கள் இருவருக்கும் செட் ஆகவில்லை அதனால் பேசிக் கொள்வதில்லை என்று வெளிப்படையாக அறிவித்தனர்.இதனால் லாஸ்லியாவை கவின் ஏமாற்றி விட்டதாக லாஸ்லியாவின் ஆர்மியும் கவினை லாஸ்லியாவின் ஏமாற்றி விட்டதாக கவினின் ஆரமியும் சண்டை இட்டு கொண்டு வந்தனர்.
இப்படி ஒரு நிலையில் கவின், மோனிகா என்ற பெண்ணை நீண்ட வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் திருமணம் நேற்று மிகவும் எளிமையாக நடைபெற்று இருந்தது. இந்த திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்களும் சில முக்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு இருந்தனர். மேலும், தன்னுடைய திருமண புகைப்படங்களை கூட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் கவின்.
கவின் திருமணத்திற்கு பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் டெட்டி பேருடன் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ள லாஸ்லியா ‘ஒன்றும் செய்ய முடியாது, ஆனாலும் ஆச்சரியப்படுகிறேன்’ என்று கேப்ஷன் போட்டுள்ளார். லாஸ்லியாவின் இந்த பதிவில் ரசிகர்கள் பலரும் கவினுக்கு திருமணம் ஆகிவிட்டது தெரியுமா ? நீங்கள் கவினை மிஸ் செய்துவிடீர்கள் என்றெல்லாம் கமண்ட் போட்டு வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவின் ‘லிப்ட்’ , டாடா போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். இந்த இரண்டு படங்களுமே நல்ல வெற்றியை கண்டது. கவினை போலவே லாஸ்லியாவும் பிக் பாஸுக்கு பின் பல படங்களில் கமிட் ஆனார். இவர் முதன் முதலில் நடித்த பிரென்ஷிப் படம் மாபெரும் தோல்வியை தழுவியது. அதனை தொடர்ந்து இவர் நாயகியாக நடித்த ‘கூகுள் குட்டப்பன்’ படமும் தோல்வியடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.