‘லாஸ்லியாவா இது ? ‘Workout வீடியோவை வெளியிட்ட லாஸ்லியா – கண்டபடி கமண்ட் செய்யும் நெட்டிசன்கள்.

0
1169
Losliya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் தமிழக இலங்கை நாட்டின் செய்தி தொகுப்பாளராக பணியாற்றியவர். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மத்தியில் பிரபலமாகி விட்டார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது இவரை குறித்து காதல் கிசுகிசு சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கவிலியா காதல் குறித்து பல கிசுகிசுக்கள் வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.இருந்தும் இருவரும் அவரவர் வழியில் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய காதல் என்ன ஆனது? என்று குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு கவின் விளக்கம் கொடுத்து இருந்தார்.

- Advertisement -

நிஜமான ரவிக்குமார் வாக்கு :

அதில் அவர் நான் சிங்கிள் தான், எனக்கான காதலை தேடி கொண்டு இருக்கிறேன், கிடைக்கவில்லை என்று கூறி இருந்தார். இதன் மூலம் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்பது உறுதி ஆகி விட்டது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதே கேஎஸ் ரவிக்குமார் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வாய்ப்புகள் காத்துக் கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.

தோல்வியை தழுவிய படங்கள் :

இதனை தொடர்ந்து லாஸ்லியா ‘பிரின்ட்ஷிப்’ படத்தில் நாயகியாக அறிமுகமானார். ஆனால், எதிர்பார்த்தபடி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ‘கூகுள் குட்டப்பன்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். மலையாளத்தில் ‘ஆண்ட்ரியட் குஞ்சப்பன்’ என்ற பெயரில் வெளியான இந்த படம் மலையாளத்தில் மாபெரும் வெற்றியடைந்தது. ஆனால், தமிழில் இந்த படம் மாபெரும் தோல்வியை தழுவியது.

-விளம்பரம்-

Transformation பதிவு :

தற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் லாஸ்லியா சமீபகாலமாக படு ஸ்லிம்மாக மாறி இருக்கிறார். அதோடு பிக் பாஸில் இருந்த லாஸ்லியாவிற்கும் ஏகப்பட்ட வித்யாசம். சமீப காலமாக லாஸ்லியாவின் காஸ்டியூம்ஸ் எல்லாம் வேற லெவலில் இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தனது Transformation பதிவை போட்டு இருந்தார். அதில் மூன்று ஆண்டுக்கு முன்னர் ஜிம்மில் எடுத்த கொண்ட புகைப்படத்தையும் அதன் பின்னர் எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

கழுவி ஊற்றும் ரசிகர்கள் :

ஆனால், லாஸ்லியாவின் இந்த பதிவை கண்ட பலர் ஜிம் சேருவதற்கு முன்னாள் பப்லியாக இருந்த லாஸ்லியா தான் நல்லா இருக்கு, இப்போ கேவலமா இருக்கீங்க என்று கமன்ட் செய்துவந்தனர். இந்த நிலையில் லாஸ்லியா gymல் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் மீண்டும் கண்டபடி கமண்ட் போட ஆரம்பித்துவிட்டனர். ஆனால், லாஸ்லியாவின் ரசிகர்கள் இந்த வீடியோவை கண்டு அவரது Transformation-ஐ பாராட்டி வருகின்றனர்.

Advertisement