ஹெலோ டாஸ்கின் போது நடந்த பிரச்சனை தான் மதுவின் தற்கொலை முயற்சிக்கு காரணமாம்.!

0
25528
Madhu

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று மதுமிதா வெளியேற்றப்பட்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களாக மதுமிதா மற்றும் ஆண்கள் அணிக்கும் பிரச்சனை ஓடியது. இந்த நிலையில் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா தன்னை காயப்படுத்தியதற்கு முக்கிய காரணமே இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஹெலோ டாஸ்கின் போது ஏற்பட்ட பிரச்சனை தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர் ஹலோ டாஸ்க்கிற்கு முன்னர் சேரன் மற்றும் மதுமிதா இருவரும் கர்நாடகா மற்றும் காவிரி விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டு உள்ளனர்.

- Advertisement -

அப்போது மதுமிதா, வருணபகவான் கூட கர்நாடக காரன் போல கொஞ்சம் கூட கருணை காட்டி தமிழ்நாட்டுக்கு மழை வர வைக்கலாம் என்று கூறியுள்ளார். இதனைக் கேட்ட ஷெரின், எதற்காக கர்நாடகா தமிழ்நாடு பிரச்சனை எல்லாம் கொண்டு வருகிறீர்கள் இங்கு நானும் இருக்கிறேன் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Madhu

இதனால் மதுமிதா மற்றும் ஷெரீனுக்கு வாக்குவாதம் முற்றி உள்ளது. மேலும், மதுமிதா கூறியது சரியான விஷயம் இல்லை என்பதால் மதுமிதா சொன்ன கருத்தை ஒளிபரப்பும் முடியாது அதனால் வேறு கருத்தை கூற வேண்டும் என்று கூறியுள்ளார் பிக் பாஸ். இருப்பினும் மதுமிதா கூறிய கருத்தில் இருந்து பின்வாங்காமல் இருந்துள்ளார் இதனால் மற்ற போட்டியாளர்கள் மதுமிதா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மதுமிதாவை மீது கடுப்பான ஷெரின் அவர் இங்கே இருந்தால் நான் இங்கே இருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அதேபோல வனிதாவும் சும்மா இங்கு வந்து விட்டு உனக்கு மட்டும் தான் அக்கறை இருக்கிற மாதிரி காட்டிக்க வேண்டாம் இவை அனைத்தும் ஓட்டுக்காக தான் செய்கிறார் என்று கூறியுள்ளார். இதனால் சற்று கோபத்தின் உச்சிக்கு சென்றபோது தனது கையை அறுத்துக்கொண்டு இந்த அளவிற்கு அக்கறை இருக்கிறது என்று கூறியுள்ளார் அதன் பின்னர் அவருக்கு மருத்துவ உதவியை அழைத்துள்ளனர் மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லை மீறி நடந்து கொண்டதால் மதுமிதாவை பிக்பாஸ் வெளியேற்றினார்.

Advertisement