பசியை மறைக்க சபரி மலை மாலை. 360 ரூபாய் இல்லாததால் 75 நாட்கள் நீண்ட விரதம். பார்த்திபனின் உருக்கமான பேச்சு.

0
3884
parthiban
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பன்முகங்களை கொண்ட நபர்களில் பார்த்திபனும் ஒருவர். இவர் திரை உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர். இவர் சினிமா உலகில் நடிகர், இயக்குனர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர். இவர் சினிமா துறையில் தனக்கென ஒரு பாதையும், முத்திரையும் உருவாக்கியவர். இவர் நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு இவருடைய வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் “ஒத்த செருப்பு சைஸ் 7”.

-விளம்பரம்-
parthiban

இந்த படம் முழுக்க முழுக்க ஒரே ஒருவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதுவரை தமிழ் சினிமா உலகில் கொண்டு வராத புது முயற்சியை பார்த்திபன் செய்து உள்ளார். மேலும், இந்த படத்தை பார்த்திபன் அவர்களே தயாரித்தும், இயக்கியும், நடித்தும் உள்ளார். இந்த படத்தில் பார்த்திபன் அவர்கள் ஒன் மேன் ஆர்மி போல நடித்து இருக்கிறார். இநத படம் முழுவதும் அவர் மட்டுமே வருவார் அதாவது வேறு எந்த ஒரு நபரின் முகமோ,உருவமோ தெரியாது. இந்த படத்திற்காக நடிகர் பார்த்திபனுக்கு பல விருதுகள் கிடைத்தது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் அவர்கள் எழுதிய கிறுக்கல், கவிதை தொகுப்பு, கதை திரைக்கதை வசனம் திரைப்படத்தின் இயக்கம் ஆகிய புத்தகங்களை அறிமுகப்படுத்தும் விழா கோவையில் நடைபெற்றது. இதில் பார்த்திபன் அவர்கள் கலந்து கொண்டார். இதில் ரசிகர்களும் கலந்து கொண்டு பார்த்திபன் அவர்களிடம் பல கேள்விகளை கேட்டன. அதற்கு அவரும் அழகாக பதில் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் ரசிகர் ஒருவர் உங்களுடைய திரையில் வாழ்க்கைக்கு முன்பும், பின்பும் இருந்த அனுபவங்கள் குறித்து கூறுங்கள் என்று கூறியிருந்தார். அதற்கு பார்த்திபன் அவர்கள் கூறியது, நான் சினிமா உலகிற்குள் நுழையும் முன் 3 நாள் தொடர்ந்து சாப்பிடாமல் இருந்த காலமெல்லாம் இருக்கிறது. டீ கூட குடிக்காமல் மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருந்து இருக்கிறேன். நான் நான் 78 மணி நேரம் சாப்பிடாமல் கூட இருந்திருக்கேன். நான் அப்போதுஒரு முறை சபரிமலைக்கு மாலை போட்டு விருந்தேன். . பட்டினியாக இருப்பதை விட விரதம் என்ற பெயரில் இருந்து விட்டால் பெருமையாக இருக்குமே என்று சபரி மலைக்கு மாலை போட்டேன். 49 நாள் விரதம் என்றாலும் 75 நாட்கள் விரதமிருந்தேன். அதற்கு எனக்கு போஸ்டர் எல்லாம் கூட அடிக்காங்க. ஆனால், அப்போது சபரி மலைக்கு செல்வதற்கு என்னிடம் ஒரு 360 ரூபாய் இல்லை என்பதால் தான் என்னுடைய விரதம் நீண்டது.

வீடியோவில் 17 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

அதற்கு பின் சினிமா உலகில் வந்த பின் எனக்கு நிலைமை மாறியது. அப்போது காலைல 15 பைசா டீக்கு வழி இல்லாமல் பட்டினியில் கனவோடு படுத்திருக்கிறேன். ஆனால், இப்போது எல்லாம் இருக்கிறது ஆனால், அந்த கனவுகள் அனைத்தும் சூடு குறையாமல் இருக்கிறது என்று கூறினார். இவரின் இந்த பேச்சு அங்கிருந்தவர்களின் மனதை ஒரு சில நிமிடம் உறைய வைத்தது. தற்போது இவர் விழாவில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பார்த்திபன் வாழ்க்கையிலும் இந்த அளவிற்கு பின்னணி உள்ளதா என்றும் கூறி வருகிறார்கள். தற்போது இவர் சிங்கிள் ஷாட்டில் இரவில் நிழல் படத்தை இயக்குகிறார். இதை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் மற்றொரு படத்தில் நடிக்க உள்ளார். புஷ்கர் காயத்திரி இயக்கத்தில் வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

Advertisement