இந்தியா முழுவதும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல், கலவரங்கள், சண்டைகள், சர்ச்சைகள், நட்பு என பல சுவாரசியமான விஷயங்கள் நிகழும். இது அனைத்துக்கும் பஞ்சம் இல்லை என்று சொல்லலாம். தற்போது ஹிந்தியில் பிக் பாஸ் சீசன் 13 நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் நடிகை மதுரிமா. இவர் தெலுங்கு மொழியில் வெளிவந்த சத்தா என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.
ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த எல்லாம் அவன் செயல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் நடிகை மதுரிமா துலி. இதற்கு பிறகு இவர் தமிழில் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இவர் பாலிவுட்டில் தான் கவனம் செலுத்தி வருகிறார். இவர் பாலிவுட்டில் பல படங்களிலும், தொடர்களிலும் நடித்து உள்ளார். நடிகை மதுரிமா அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து உள்ளார்.
இதையும் பாருங்க : ‘மதனா’ என்று டைட்டில் கூட ரஜினி வெச்சிட்டார். கே எஸ் ரவிகுமார் சொன்ன சூப்பர் தகவல்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் நடிகை மதுரிமா மற்றும் விஷால் ஆதித்ய சிங் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டு உள்ளார்கள். தற்போது இந்த நியூஸ் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகர் விஷால் ஆதித்ய சிங்கும், நடிகை மதுரிமாவும் காதலர்களாக வலம் வந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. விஷால் ஆதித்ய சிங் அவர்கள் தொலைக்காட்சி தொடரில் பிரபலமானர். இவர்கள் இருவரும் ஹிந்தியில் ஒளிபரப்பான நாச் பால்யே 9 என்ற நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொண்டு இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியின்போது இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்து உள்ளார்கள். பின் மதுரிமாவுக்கும், விஷாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். இவர்கள் பிரிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியது என்று விஷால் ஆதித்ய சிங் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இவர்கள் இருவருமே ஹிந்தி பிக் பாஸ் சீசன் 13-இல் போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளார்கள். அந்த பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது மதுரிமாவும், விஷால் சிங்கும் சண்டை போட்டு உள்ளார். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் தண்ணீர் ஊற்றிக் கொண்டு தான் சண்டை போடத் தொடங்கினார்கள். பின் மதுரிமா மிகவும் கடுப்பாகி விஷாலை frying போனால் கொண்டு அடித்து தாக்கியுள்ளார். இது போட்டியாளர்களுக்கும், பார்க்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நிகழ்ச்சி தொகுப்பாளர் சல்மன் கான் அவர்கள் நடிகை மதுரிமாவை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி உள்ளார். தற்போது இந்த தகவல் பாலிவுட் வட்டாரத்தில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.