தமிழ் சினிமாவில் முன்னனி நடிகரில் ஒருவராக திகழ்ந்து வரும் சிம்பு கடந்த சில காலமாக சினிமாவில் பெரும் சறுக்களை கண்டுள்ளார். சமீப காலமாக சிம்பு நடிப்பில் வெளியான எந்த படங்களும் ஓடவில்லை. மேலும், இவர் கமிட் ஆகி இருந்த மாநாடு படமும் இவரது ஒத்துழைப்பு இல்லாததால் கைவிட பட்டது. ஆனால், சிம்பு மீண்டும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார். படபிடிப்பிற்கு ஒழுங்காக வர வேண்டும் என்று தற்போது சபரி மலைக்கு மாலை போட்டுள்ளார்.
நடிகர் சிம்பு மாலை போட்டுள்ளதால் அவரது நண்பரும் நடிகருமான மஹத்தும் மாலை போட்டுள்ளார். நடிகர் மஹத் சிம்புவின் நெருங்கிய நண்பர் என்பது பலருக்கும் தெரியும். சிம்பு நடித்த பல்வேறு படங்களில் மஹத்தும் நடித்துள்ளார். இதனால் சிம்பு என்ன செய்தாலும் அவருக்கு ஆதரவாக இருந்து வருகிறார் நடிகர் மஹத்.
இதையும் பாருங்க : தளபதி 64 பட நாயகி மாளவிகா மோகனை அசிங்கபடுத்தி அனுப்பிய மணிரத்னம்.
சமீபத்தில் மாலையும் பக்தியுமாக இருக்கும் சிம்பு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை மஹத் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் சாமியிடன் சாப்பாடு , சாமி சரணம் என்று பதிவிட்டிருந்தார். இதனால் கடுப்பான ரசிகர்கள் சிம்புவிற்கு சொம்படிப்பதை நிறுத்து. சிம்புவை கெடுப்பதே நீ தான். மாலை போட்டால் திட்ட மாட்டோம்னு நெனச்சியா என்றெல்லாம் மஹத்தை கழுவி ஊற்றி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சிம்பு தனது படத்திற்கு அண்டாவுல பால் ஊத்துங்க என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் கிண்டலுக்கு உள்ளானது. இதனால் கோபமடைந்த மஹத் ,சிம்புவை வெறுக்கும் நபர்களுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்தார். மேலும், பேட்டி ஒன்றில் பங்கேற்ற மஹ்த,சிம்பு பற்றி பேசுகையில், சிம்புவுக்கு பப்லிசிட்டி வேண்டும் என்று அவசியமில்லை அவர் அந்த விடியோவை தெரிந்தேதா பண்ணார்.
ஒரு விஷத்தை நெகட்டிவாக சொல்லும் போது தான் அது பலருக்கும் போய் சேரும். அதுமட்டுல்ல சிம்பு இனிமேல் பிரபலத்தை தேடிக்கொண்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பிறக்கும் போதே ரூ 1000 கோடி சொத்து இருந்தது என்றுகூறியிருந்தார். அப்போதும் மஹத்தை ரசிகர்கள் கழுவி ஊற்றி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தான் சிம்புவை கெடுப்பதே மஹத் தான் என்று ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.