போலீசில் புகார் அளித்து, புகார் கொடுத்த ஆதாரத்தை வெளியிட்ட பிக் பாஸ் 6 பிரபலம். யார் தெரியுமா ?

0
413
maheswari
- Advertisement -

ஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி கார் வழங்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இந்த சீசனில் விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று விடலாமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் விக்ரமன் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் மகேஸ்வரி :

அதே போல பிக் பாஸ் வீட்டில் இருந்த வரையில் அசீமிற்கு எதிராக குரல் கொடுத்தவர்களில் ஒருவர் விஜே மகேஸ்வரி. இவர் ஆனால் இவர் வெகு விரைவாகவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் அனுப்பப்பட்டார். இதற்கு பலரும் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். மேலும விஜே மகேஸ்வரி பிக் பாஸ் வீட்டை வீட்டு வெளியில் வந்த பிறகும் அசீம் பற்றி தன்னுடைய கருத்துக்களை மிக தைரியமாக கூறிவந்தார். இதற்கு எதிர்ப்புகளும் சோசியல் மீடியாவில் மஹேஸ்வரின் மீது பல எதிர்ப்புகளும் வந்தது.

தவறான முன்னூதாரணம் :

இப்படி பட்ட நிலையில் அசீம் வெற்றியடைந்ததால் இது சமுதாயத்திற்கு தவறான முன்னுதாரணமாக இருக்கும் என கூறிவந்தார். மேலும் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சென்ற மகேஸ்வரியை அசீம் சுயமரியாதை இழக்கும் வகையில் பேசினார் இது தனக்கு மன வருத்தத்தை கொடுத்தாக கூறினார். இருந்தபோதிலும் மகேஸ்வரி எந்த பதிவு போட்டாலும் சிலர் அவரை கலாய்த்து அவரது மகனை ட்ரோல்ல செய்தும் பதிவுகளை இட்டு வந்தனர். இந்நிலையில் தான் இந்த பதிவுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜெ மகேஸ்வரி ஒரு செயலை செய்துள்ளார்

-விளம்பரம்-

இன்ஸ்டா பதிவின் மூலம் எச்சரிக்கை :

அதாவது விஜே மஹேஸ்வரி தன்னுடைய மகனை பாராட்டி பதிவு ஒன்றிய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில் ” நச்சு நிறைந்த ஆண்கள் உள்ள இந்த உலகத்தில் ஒரு போராளியாக இருப்பதற்கு நன்றி. நீ இந்த உலகை பெண்களுக்கான சிறந்த உலகமாக மாற்றப்போகிறாய் என்பதை நான் நம்புகிறேன். அதற்காக நான் பெருமையும் கொள்கிறேன். அம்மா உன்னை பாதுகாப்பான் என்று பதிவிட்டு இறுதியில் குறிப்பு ஒன்றையும் போட்டிருக்கிறார்.

புகார் அளித்த மகேஸ்வரி :

அதில் புகார் அளிக்கப்பட்டு விரைவில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த பதிவு துணை பற்றியும் தன்னுடைய மகனை பற்றியும் தவறாக பேசுபவர்களுக்கு கொடுக்கப்பட்ட பதிலடியாக மகேஸ்வரியின் ரசிகர்கள் இந்த பதிவை வைரலாகி வருகின்றனர்.இப்படி ஒரு நிலையில் சொன்னபடியே போலீசில் புகார் அளித்து அந்த புகார் குறித்த ரசீதையும் பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement