‘என் ரசிகர்கள் எல்லாருக்கும் ரொம்ப நன்றி’ – பிக் பாஸிற்கு பின் மணிகண்டன் வெளியிட்ட முதல் உருக்கமான பதிவு.

0
657
manikandan
- Advertisement -

பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சி கடந்த ஆக்டோபர் 3ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் மணிகண்டன் வெளியேறிய நிலையில் அவர் பிக் பாஸ் வீட்டை வீட்டு வெளியேறிய பிறகு முதல் முறையாக தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். பாஸ் சீசன்6 நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே இருக்கும் நிலையில் போட்டியை விறுவிறுப்பாக்க பிக் பாஸ் பல பதிய டாஸ்குகளை கொடுத்து வருகிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் தொடக்கம் முதலே பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக எந்த சீசன்களில் இல்லாத வாரு 4 முறை பிக் பாஸ் வீட்டின் தலைவரான மணிகண்டன் இந்த பிக் பாஸ் சீசனில் மிக முக்கியமான போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார். இவர் தொடக்கத்தில் எல்லா போட்டியாளர்களிடமும் அன்பாக பேசி வந்த இவர் அசீமுடன் இணைந்து விக்ரமனை கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் இவர் இப்படி செய்தது தான் மணிகண்டன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதற்கு காரணம்.

- Advertisement -

இதையும் பாருங்க : விஜய்யை சூப்பர் ஸ்டார் என்றதால் பிஸ்மி வீட்டை முற்றுகையிட்ட ரஜினி ரசிகர்கள் – கண்டனம் தெரிவித்து சீமான் வெளியிட்ட அறிக்கை.

இவர் வெளியேறியதற்கு முன்னதாக “Freez Task” நடந்தது `அதில் மற்ற போட்டியாளர்களில் குடும்பத்தினர் வந்திருந்தனர். அப்போது சில சுவாரசியமான நிகழ்வுகளின் நடந்தது. இந்த நிலையில் மணிகண்டனின் மனைவி, அம்மா மற்றும் அவரது சகோதரியான ஐஸ்வர்யா ராஜேஷும் வந்திருந்தனர். மணிகண்டன் அவரது தங்கை நடித்திருந்த “ட்ரைவர் ஜமுனா” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

அதோடு மணிகண்டன் சில சீரியல்களிலும், பிக் பாஸ் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டிருக்கிறார். அதோடு கலர்ஸ் விடிவில் ஒளிபரப்பான வேலுநாச்சியார் நாடகத்திலும் நடித்திருந்தார். மேலும் மணிகண்டனும் அவரது மனைவியும் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் & மிஸஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் இந்த பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 80 நாட்களுக்கு மேலே இருந்து தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.

இப்படி வெளியேறிய மணிகண்டன் முதல் முறையாக ஒரு பதிவை போட்டுள்ளார். அந்த பதிவில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பயணம் என்றும் அது என்னுடைய மனதில் இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். அதே போல என்னுடைய சக போட்டியாளர்களுடன் இருந்த அந்த தருணம் எனக்கு பலவற்றை கத்துக்கொடுத்து. அவர்களுடன் நானும் மகிழ்ச்சியாக இருந்தேன். என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்த பிக் பாஸ் குழுவிற்கும், என்னுடைய ரசிகர்களுக்கும் நன்றி என்று அந்த பதிவில் கூறியிருந்தார் மணிகண்டன்.

Advertisement