மூக்குத்தி அம்மன் படத்திற்காக நயன் அசைவ விரதமிருப்பதா சொன்னாரே. ஆனால், இது என்ன விக்கி.

0
7960
nayanthara-vignesh
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.நடிகை நயன்தாரா சினிமா திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும், இப்போது கதைக் களத்திற்கு ஏற்றவாறு தோற்றத்தில் தான் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

பல்வேறு நடிகர்களுடன் கைகோர்த்து நடித்த நயன் சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நல்ல கதை என்றால் காமெடி நடிகர்களின் படத்தில் கூட நடிக்க நடிகை நயன்தாரா தயங்குவது கிடையாது. இவர் கதாநாயகியாக நடித்த கோலமாவு கோகிலா படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த நிலையில் நடிகை நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி இயக்குணராக களமிறங்கி இருக்கும் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.

இதையும் பாருங்க : ஈரோடு மகேஷின் மனைவி இந்த சன் மியூசிக் தொகுப்பாளி தானா. இவ்வளவு பெரிய மகள் வேறு இருக்கிறாரா.

- Advertisement -

இந்தப் படத்திற்காக நடிகை நயன்தாரா விரதம் இருக்க போவதாக அறிவித்திருந்தார். மேலும்,அம்மன் படத்தில் நடிக்க இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடியும் வரை அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே உண்ண போகிறாராம் நடிகை நயன். இந்த விஷயம் உண்மையா பொய்யா என்று ரசிகர்கள் குறைந்த நிலையில் இதனை சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் போது செய்திருக்கிறார் ஆர் ஜே பாலாஜி. சமீபத்தில் இந்த படத்தின் பூஜைகள் கூட நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் கூட வைரலாக பரவியது. ஆனால், அதிலும் நயன்தாரா பங்குபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா இதுபோன்ற விரதம் இருப்பது முதல் முறை அல்ல ஏற்கனவே தெலுங்கில் கடந்த 2011ம் ஆண்டு பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதையாக நடித்திருந்த நயன்தாரா அந்த படம் தொடங்கப்பட்டதிலிருந்து அசைவ உணவுகளை சாப்பிடாமல் விரதம் இருந்து வந்தார் இப்படி படத்திற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் இருந்து வருவதாலோ என்னவோ இவர் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் என்று பலரும் பூரித்து போனார்கள்.

-விளம்பரம்-

ஆனால், சமீபத்தில் விக்னேஷ் சிவன் புகைப்படம் ஒன்று நயன்தாரா விரதம் குறித்து பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. விக்னேஷ் சிவன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை ஸ்டேட்டஸ்ஸாக வைத்திருந்தார். அந்த புகைப்படத்தில் டர்கிஷ் சிக்கன் அளித்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், அந்த புகைப்படத்தில் ஒரு பெண்ணின் கையும் தெரிகிறது. மூக்குத்தி அம்மன் படத்திற்காக நயன்தாரா அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பதாக அறிவித்த நிலையில் இந்த புகைப்படம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த பெண்ணின் கை நயன்தாராவுடையது தானா என்பது தானா ? நயன்தாரா அசைவத்தை சாப்பிட்டாரா போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளளது.

Advertisement