‘வீட்லயும் சேத்துக்க மாற்றங்க, சோத்துக்கும் வழி இல்ல’ – மீரா மிதுன் தற்கொலை முயற்சி. வைரலாகும் வீடியோ இதோ.

0
239
meera
- Advertisement -

மீரா மிதுன் தற்கொலைக்கான பின்னணி குறித்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சோஷியல் மீடியாவின் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை மீரா மிதுன். இவர் நடிகை மட்டும் இல்லாமல் மாடலும் ஆவார். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியிலேயே இவர் சர்ச்சை போட்டியாளராக திகழ்ந்து இருந்தார். மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களை செய்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் மீராமிதுன் அவர்கள் பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாக பேசி இருந்தார்.

-விளம்பரம்-
meera

இதனால் மீரா மிதுன் மீது பல்வேறு அமைப்புகள் காவல் துறையில் புகார் அளித்து இருந்தார்கள். இதனடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் மீரா மிதுனை கைது செய்து புழல் சிறையில் அடைத்து இருந்தது. மேலும், இந்த வழக்கில் ஜாமீன் கோரி மீரா மிதுன் மனுத்தாக்கல் செய்திருந்தார். சமீபத்தில் தான் மீரா மிதுன் சிறையிலிருந்து வெளிவந்து இருந்தார். சிறையிலிருந்து வெளி வந்தவுடன் மீராமிதுன் நிறைய பேட்டி கொடுத்து இருந்தார். அதில் அவர், நான் செய்த பாவங்களுக்கான தண்டனையை அனுபவித்து விட்டேன்.

- Advertisement -

மீரா மீது குறித்த சர்ச்சை:

எல்லோரும் மன்னித்து விடுங்கள் என்றெல்லாம் பேசி இருந்தார். பின் இவர் சிறைக்கு செல்வதற்கு முன் பேயை காணோம் படத்தில் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இருந்தாலும் இவர் குறித்து ஏதாவது ஒரு சர்ச்சை சோசியல் மீடியாவில் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மீண்டும் மீரா மிதுனை கைது செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு விட்டு இருக்கிறது. இந்நிலையில் மீராமிதுன் தற்கொலை செய்ததது குறித்து பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,

மீரா மிதுன் அளித்த பேட்டி:

நான் இப்போது மருத்துவமனையில் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு தற்கொலை செய்கிற எண்ணம் அதிகமாக வந்துவிட்டது. மன அழுத்தம் அதிகமாகி வாழவே பிடிக்கல, வாழவே விருப்பம் இல்லாமல் இருக்கும் நிலையில் இருக்கிறேன். அதனால் மருத்துவமனையில் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு முக்கிய காரணம் சமுதாயம் தான். அவர்களால் தான் நான் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டேன். இனிமேல் நான் என்ன செய்தாலும் இந்த சமுதாயம் என்னை வாழ விடாது என்று நினைத்து தான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.

-விளம்பரம்-

தற்கொலைக்கு முயற்சி செய்த மீரா:

அதற்குப் பிறகு என்னை காப்பாற்றி மருத்துவமனையில் ட்ரீட்மென்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு ஸ்ட்ராங்காக இருந்தாலும் நான் சந்தித்த பிரச்சனைகளை வேறு யாராவது சந்தித்து இருந்தால் இவ்வளவு ஸ்ட்ராங்காக இருப்பார்களா தெரியாது? இருந்தாலும் என்னை அடித்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்போ என்னால் வேலைக்கு போக முடியல, சூட்டிங்க போக முடியல, கோர்ட்டு கேஸ் என்று அலைந்து கொண்டு இருப்பதால் வருமானம் இல்லை. இதனால் மன அழுத்தம் எனக்கு அதிகமானது. என்னை வீட்டிலும் சேர்த்துக்கொள்ளவில்லை.

meera

தற்கொலைக்கு காரணம்:

எவ்வளவு சாதித்தும் என் பெயர் தெரியவில்லை. அதனால் தான் தற்கொலை செய்தால் பெயர் வெளிவரும் என்று தான் நான் இந்த முடிவு எடுத்தேன். சினிமாவில் நடிகைகள் கிளாமராக நடித்தால் உடை அணிந்தால் பாராட்டுகிறார்கள். அதை நான் செய்ததற்கு என்னை கேவலமாக பேசுகிறார்கள். என்னால் தான் பாரம்பரியம் பாதிக்கப்படுகிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். மேலும், நான் ஆடை அணிவது குறித்து எல்லாம் என் மீது கேஸ் போட்டு இருக்கிறார்கள். அதோடு நான் சமீபகாலமாகத் தான் கோபமாக பேசி வீடியோ போட்டு இருக்கேன். ஆனால், அதற்கு முன்பு எல்லாம் நன்றாக பேசிய வீடியோ போட்டு இருக்கிறேன்.

மீராவின் வேண்டுகோள்:

இந்த சமுதாயம் என்னை வாழ விட மாட்டேங்குது. எதுவும் செய்யவிடவில்லை என்று தான் நான் கோபமாக பேசியிருந்தேன். கிட்டத்தட்ட ஆறு வருடமாக என் மேல் வழக்குகள் தொடரப்பட்டு இருக்கிறது. நான் மன்னிப்பு கேட்டும் விடமாட்டுகிறார்கள். நான் ரொம்ப மன அழுத்தத்தினால் தற்கொலை செய்யும் எண்ணம் மாறி விட்டது. நிறைய நடிகைகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். அவர்கள் இறந்த பிறகு அய்யோ, பாவம் நல்ல பொண்ணு என்று சொல்வதற்கு முன்பு அவர்கள் உயிரோடு இருக்கும்போது வாழ விடுங்கள். இதற்கு மேல் என்னை வாழ விடவில்லை என்றால் தற்கொலை செய்வது தவிர வேறு எதுவும் இல்லை என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.

Advertisement