சமூக வலைதளத்தில் சவடால் விட்டுக்கொண்டு அடாவடி செய்து வந்த மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை தர குறைவாக பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். இதனால் பலரும் இவர் மீது புகார் அளித்து இருந்தனர்.ஆனால், போலீஸ் தன்னை கைது செய்ய முடியாது என்று சவால்விட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் நேற்று இவரை கேரளா உள்ள ஹோட்டல் ஒன்றில் போலீசார் கைது செய்து உள்ளனர். தன்னை கைது செய்த போது போலீசிடேமா தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.
இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜர் படத்தப்பட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் மீரா மிதுனின் காதலரான கலர் கோழி குஞ்சி எனப்படும் அபிஷேக் சேமியையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.மீரா மிதுன் எது செய்தாலும், அவர் செய்வது தவறு என்பதை சுட்டி காட்டாமல் அவருக்கு உறுதுணையாக இருந்து, அவர் வெளியிடும் வீடியோக்களை படம் பிடித்து கொடுத்த குற்றத்திற்காக தான் அபிஷேக் ஷாம் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது இருவரும் புழல் சிறையில் கம்பி என்னிக்கொண்டு இருக்கின்றனர். சிறையில் இருக்கும் மீரா மிதுன் போலீசாரின் விசாரனைக்கு ஒத்துழைக்காமல் அடாவடி செய்து வருகிறாராம். அவரை மன நல மருத்துவரிடம் கவுன்சிலிங் பெற போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மீரா மிதுன் பல நட்சத்திர விடுதிகளில் தங்கி போதைப்பொருள் பயன்படுத்தி உல்லாசமாக இருந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.
வழக்குகளில் இருந்து தப்பிக்க மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தி மோசடிகளை வேலைகளை செய்வதற்கு, மீராவுக்கு உதவியாக பிரபல பெண் தோழி ஒருவர் இருந்துள்ளார். இந்த பெண்ணும் கூடிய விரைவில் சிக்க வாய்ப்புள்ளதாகவும், போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துவருவதாகவும் கூறப்படுகிறது.