இதுனால தான் மீரா மிதுன படத்துல பேயா போட்டேன் – மீரா மிதுனை பங்கம் செய்த இயக்குனர். வீடியோ இதோ.

0
3964
meera
- Advertisement -

சமூக வலைதளத்தில் சவடால் விட்டுக்கொண்டு அடாவடி செய்து வந்த மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சமூக வலைதளத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்தவர் மாடலும் நடிகையுமான மீரா மிதுன். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் சென்ற 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களை செய்து வந்த இவர் சமூக வலைதளத்தில் அடிக்கடி பலரை பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியலினத்தவரை தர குறைவாக பேசிய குற்றத்திற்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் பாருங்க : ‘நல்ல குரல் வளம்’ – யூடுயூபர் அபிஷேக்கை மீண்டும் ஒரு முறை வச்சி செய்த விஜய் ஆண்டனி.

- Advertisement -

கடந்த சில வாரங்களுக்கு முன் ஜாமின் கோரி இருந்த மீரா மிதுன், தனக்கு பல படங்கள் இருப்பதாகவும் அதனால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். ஆனால், அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. மீரா மிதுன் பேய காணோம் என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த ஷூட்டிங்கின் போது இயக்குனர் சீன் சொல்லிக்கொடுத்து கொண்டு இருக்கும் போதே புகைபிடித்து கொண்டே இருந்தார்.

இதனால் KPY கோதண்டத்திற்கும் இவருக்கும் வாக்கு வாதம் கூட ஏற்பட்டது. இப்படி ஒரு நிலையில் பேய காணோம் படத்தின் பிரெஸ் மீட்டில் பேசிய படத்தின் இயக்குனர், நம் தமிழ் நாட்டு மக்கள் அவரை சாதாரணமாக பாட்டியாக தான் பார்க்கின்றனர். அதனால் அவரை எப்படி காமிச்சாலும் மக்கள் பார்ப்பார்கள் என்று நினைத்தேன்.

-விளம்பரம்-

இதுவரை 90 சதவீதம் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, எஞ்சியுள்ள படப்பிடிப்பை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். ஏனெனில், இப்படத்தின் நாயகி மீரா மிதுன் சிறையில் உள்ளதால், படப்பிடிப்பை நடத்த முடியவில்லையாம். அவரின் லாக்கப் ரிலீஸுக்கு பின்னர் தான் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று வேடிக்கையாக கூறியுள்ளார்.

Advertisement