தன் மனைவியின் உருவத்தை மோசமாக விமர்சித்தவரை எச்சரித்த மைனா கணவர் – குடும்பத்துடன் மன்னிப்பு கேட்ட யூடுயூபர்.

0
719
myna
- Advertisement -

பாஸ் சீசன்6 நிகழ்ச்சியானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மொத்தமாக 20 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஒருவாரம் கழித்து போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் தொகுப்பாளனியின் நடிகையுமான மைனா நந்தினி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் தான் மைனா நந்தினி. அதன் பிறகு பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் கலந்து கொண்டு தன்னுடைய வட்டார மொழியின் மூலம் ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருக்கும் மைனா நந்தினி தமிழ் சினிமாவில் சமீபாத்தில் வெளியாகியிருந்த விக்ரம், விருமான், சர்தார் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்திருந்தார். தொடக்கத்தில் இருந்தே மணிகண்டன், மகேஸ்வரி, அமுதவாணன் போன்றவர்களுடன் இணைந்து விளையாடும் மைனா நந்தினி பாதுகாப்பாக விளையாடுவதாகவும் , பிக் பாஸ் தொகுப்பாளரான கமலஹாசனை அவமதித்து பேசுவதாகவும், டாஸ்குகளை நன்றாக விளையாடவில்லை என்றும் பல பிக் பாஸ் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

- Advertisement -

மைனாவிற்கு சாதகமான டாஸ்க்குகள் :

இந்நிலையில் நேற்று பிக் பாஸ் அடுத்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் கொடுத்திருந்தார். அந்த டாஸ்கில் டயப்பரின் மூலம் அதிக நீரை சேகரிப்பவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த டாஸ்கில் ரட்சிதா, அமுதவாணன், மைனா நந்தினி கலந்து கொண்டனர். இந்த டாஸ்கில் மைனா நந்தினி வெற்றியடைந்தார். இதனால் இந்த வாரம் எலிமினேஷனின் இருந்து மைனா நந்தினி காப்பாற்றப்பட்டார். இந்த நிலையில் மைனா நந்தினி வெற்றியடைந்ததற்கு நெட்டிசன்கள் மத்தியில் பல எதிர்ப்புகள் எழுந்தன.

உருவாக்கேலி செய்த யூடியூபர் :

இப்படிப்பட்ட நிலையில் யூடியூபில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பகுத்தாய்வு செய்யும் சேனல் ஓன்று டாஸ்க்கிற்காக டயப்பர் அணிந்து விளையாடிய மைனா நந்தினியை உருவாக்கேலி செய்யும் வகையில் பேசியிருந்தது. அந்த சேனல் அப்படி மைனாவை உருவாக்கேலி செய்து பேசிய வீடியோ வைரலாகியது. இந்நிலையில் சமீபத்தில் மைனா நந்தினியின் கணவர் யோகேஸ்வரன் பிரபல செய்தி ஊடகம் ஒன்றிக்கு பேட்டியளித்திருந்தார். அதில் மைனா நந்தினியை உருவாக்கேலி செய்த சேனலை கண்டித்து பேசியிருந்தார்.

-விளம்பரம்-

யோகேஷ் கூறியது :

அந்த பேட்டியில் யோகேஷ் கூறியதாவது `நேற்று நடந்த டாஸ்கில் மைனா நந்தினி டயப்பர் அணிந்து விளையாடியதை பல யூடியூப் சேனல்கள் விமர்சித்து வருகின்றனர். பிக் பாஸ் என்றாலே போட்டியாளர்களின் மீது விமர்சங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதில் ஒரு குறிப்பிட்ட சேனல் மட்டும் மைனா நந்தினியின் அந்தரங்க உறுப்பை கூறி கேலி செய்தாக கூறினார். மேலும் அசீம், விக்ரமன் போன்றவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்னை என்றால் அவர்களுக்கு துணையாக மக்கள் செல்கின்றனர்.

ஆனால் மைனா நந்தினியை இப்படி உருவாக்கேலி செய்யும் போது மக்கள் பலரும் அதனை தட்டி கேள்வி கேர்ப்பதை விட்டுவிட்டு அதனை ஆதரித்து கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். ஆனால் அந்த சேனல் பார்வையாளர்களின் விருப்பத்திற்காக இந்த வீடியோ என்று கூறிவிட்டு சென்றிருக்கலாம். ஏனென்றால் அப்படி பேசியது தவறு ஒருவேளை அந்த இடத்தில் உங்களுடைய வீட்டில் ஒருவரை இப்படி சொல்லியிருந்தால் உங்களுக்கு எவ்வளவு மாணவருத்தமமாக இருந்திருக்கும் என்று கூறினார்.

நினைத்தால் “ஸ்டிரைக்” கொடுத்திருப்பேன் :

மேலும் நான் நினைத்திருந்தால் ஒரு நிமிடத்தில் சேனலுக்கு “ஸ்டிரைக்” கொடுத்திருக்கலாம். ஆனால் அதனை நான் செய்யவில்லை இதற்கு பிறகாவது யாருக்குமே அவர் அப்படி செய்யக்கூடாது என்பதுதான் என்னுடைய விருப்பம் என்று கூறினார். மேலும் விஜய் டிவி மைனாவிற்கு உதவி செய்கிறது என்றால் ஏன் கடந்த பிக் பாஸ் சீசன்களில் கலந்து கொண்ட விஜய் டிவியை சேர்ந்தவர்கள் பெரிதாக பிரபலமாகவில்லை. எல்லோருமே ஒரு கேட்ட பெயருடன்தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகின்றனர் இதனை எப்படி உதவி என்று கருதுவது என்று கூறியிருந்தார்.

மன்னிப்பு கேட்ட யூடியூபர் :

இந்நிலையில் மைனா நந்தினியின் கணவர் யோகேஸ்வரன் பேசிய வீடியோ வைரலாகவே மைனாவை உருவாக்கேலி செய்த யூடியூப் சேனல் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் பலர் மைனா நந்தினிக்கு விஜய் டிவி உதவி செய்ததினால்தான் மைனா இந்த வார ஏவிக்க்ஷனில் இருந்து காப்பற்றப்பட்டதாக பலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement