மைனா நந்தினி கணவருக்கு என்ன ஆனது – புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் ஆறுதல்.

0
524
myna
- Advertisement -

கடந்த மாதம் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒருவாரம் கழித்து போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் தொகுப்பாளனியின் நடிகையுமான மைனா நந்தினி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் தான் மைனா நந்தினி. அதன் பிறகு பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் கலந்து கொண்டு தன்னுடைய வட்டார மொழியின் மூலம் ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

2009ஆம் ஆண்டு வெளியான “வெண்ணிலா கபடிக்குழு” திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய மைனா நந்தினி அதனை தொடர்ந்து கலக்க போவது யாரு? நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமான இவர் பின்னர் வந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரோமியோ ஜூலியட் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு விஜய் டிவியின் ‘சரவணன் மீனாட்சி’ இவருக்கு பிரபலத்தை தர அமுதா ஓர் ஆச்சரியக்குறி, பாண்டியன் ஸ்டோர்ஸ், அரண்மனை கிளி, சின்னத்தம்பி போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்.

- Advertisement -

தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த மைனா நந்தினி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான விக்ரம், விருமான், சர்தார் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் போதுதான் தற்போது பிக் பாஸ் சீசன்6ல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். சின்னத்திரையில் பிரபலமான நந்தினி பல காலங்களாக கார்த்திகேயன் என்பவரை காதலித்து 2017ல் அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கார்த்திகேயன் திருமணமாகி 6 மதங்களிலேயே தற்கொலை செய்து கொண்டார். இதில் மைனா நந்தினியின் பெயர் பெரியளவில் அடிபட்டது.

பல சோகங்களுக்கு மத்தியில் தொடர்ந்து சினிமாவிலும் சீரியலிலும் நடித்து வந்த மைனா நந்தினி கடந்த 2019ஆம் ஆண்டு சின்னத்திரை காமெடியனான யோகேஷ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகர் யோகேஷ் ஜீ டிவியில் ஒளிபரப்பான சதியா, நாயகி போன்ற தொடர்களில் நடித்திருந்தார். இந்நிலையில் திருமணமான இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மேலும் Mr & Mrs என்ற நிகழ்ச்சியில் மைனா நந்தினியும் யோகேஷ் வரனும் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்கள், அதோடு தங்களில் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளையும் அதில் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

-விளம்பரம்-

இப்படியிருக்கும் போதுதான் மைனா நந்தினி பிக் பாஸ் சீசன்6ல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் மைனா நுழைந்து சில நாட்களே ஆனா நிலையில் தற்போது அவரின் கணவர் யோகேஷ் கையில் கட்டுப்போட்டு ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் செல்லக்குட்டிகாலே எனது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக என்னால் அரையிறுதியில் விளையாட முடியவில்லை.

ஜோடி நடனம் ரீலோட் செய்யப்பட்டதால் என் மீது பல எதிர்பார்ப்புகள் உங்களுக்கு இருப்பது எனக்குத் தெரியும், ஆனால் இந்த சூழ்நிலையில் எனது ஆரோக்கியத்தையும் எனது குடும்பத்தையும் நான் கவனித்துக் கொள்ள வேண்டும். அதனால் டேன்ஸ் ஜோடி டேன்ஸில் என்னால் கலந்து கொள்ளமுடியாது மன்னித்து விடுங்கள்`என் உடல் சரியானதும் நான் கண்டிப்பாக மீண்டும் வருவேன் என்று அந்த பதிவில் கூறியிருந்தார். இப்படி இவர் போட்டிருக்கும் இந்த பதிவானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement