ஆபாச படத்தை வெளியிடுவேன் என்று மிரட்டிய நபர் – புகைப்படத்துடன் வெளியிட்ட நமீதா.

0
106610
namitha
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை நமிதா. தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை நமிதா. இவர் அனைவரையும் மச்சான் என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம். தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர் நடிகை நமீதா.. பின் தமிழ் சினிமாவில் விஜய்,அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

2017 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை நடிகை நமீதா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சினிமா வாய்ப்புகளுக்காக போராடி வருகிறார் நடிகை நமீதா. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லமால் கவலையில் உள்ளார் நடிகை நமீதா. பின் சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : எப்படி தந்தையுடன் இப்படி போஸ் கொடுப்பீங்க. பிக் பாஸ் அனுயா புகைப்படத்தை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.

பின் கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார். இதன் மூலமாவது பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்று பல போராட்டங்கள் நமீதா அவர்கள் செய்து வந்தார். நடிகை நமீதா தற்போது ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகி உள்ளார். ஸ்ரீமகேஷ் இயக்கும் இந்த படத்தில் படத்தின் தயாரிப்பாளரான வாராகி, கொடூரமான வில்லனாக நடிக்கிறார். இந்த நிலையில் நடிகை நமிதாவிற்கு மர்ம நபர் ஒருவர் ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார்.

-விளம்பரம்-

அந்த நபரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நமீதா, புகைப்படத்தில் இருக்கும் தமிழ் செந்தமிழ் என்ற இவன் என்னுடைய இன்ஸ்டாகிராமில் ஹாய் ஐட்டம் என்று மெசேஜ் செய்திருந்தான். அவனை நான் எதிர்கொண்ட போது தன்னுடைய அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது என்றும் கூறினான். பின் அவனிடம் நான் தொடர்ந்து பேசிய போது, அவன் என்னுடைய ஆபாச படத்தை பார்த்து உள்ளதாகவும் அதனை தான் இணையதளத்தில் தற்போது வெளியிடப் போவதாகவும் கூறினான்.

இதனால் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று கூறிவிட்டேன். இதுபோன்ற கேவலமான புத்தி கொண்ட நபர்கள் ஒரு பெண்ணை எப்படி வேண்டுமானாலும் கேவலமான வார்த்தை சொல்லி அழைக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது எப்படி முடியும்? ஏன் நான் இதுபோன்ற வார்த்தைகளை கேட்க வேண்டும் நான் மீடியாவில் இருப்பதாலா? இல்லை நான் கவர்ச்சியான தொழிலில் இருப்பதாலா? இல்லை அனைவருக்கும் என்னை தெரியும். நான் ஒரு பெண் என்பதாலா ? என்னுடைய அமைதியை நீங்கள் தவறாக எடுத்துக்கொண்டு தவறு செய்ய வேண்டாம். ஒ

ரு உண்மையான ஆண்மகன் ஒரு பெண்ணை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பார். இதுபோன்ற நபர் பெற்ற தாயை மரியாதை குறைவாக பேசினால் அதை ஏற்றுக் கொள்வானா? ஒன்பது நாட்கள் துர்க்கா பண்டிகையை கொண்டாடி கடவுளை வழிபடுவது, மகளிர் தினத்தை கொண்டாடுவது. இதற்கெல்லாம் பதிலாக பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளுங்கள் அது தான் முக்கியம் என்று கூறியுள்ளார் நமீதா.

Advertisement