யாருக்கும் தெரியாது இதை நான் 7 ஆண்டுகளாக செய்து வருகிறேன் – நிகழ்ச்சியில் அனைவரையும் ஷாக்காகிய நமீதா.

0
3332
namitha
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை நமிதா. இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் கட்டி இழுத்தவர். இவர் அனைவரையும் மச்சான் என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார். நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப் படத்தின் மூலம் தான் நமீதா தமிழ் சினிமாவில் அறிமுகமானர். தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத் குமார், சத்தியராஜ், விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார். பிறகு இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் நடிகை நமீதா நிகழ்ச்சிகளில் நடுவராக சிறிது காலம் பணியாற்றி வந்தார். கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லமால் கவலையில் உள்ளார். பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் நடிகை நமீதா போட்டியாளராக பங்கு பெற்றார்.

- Advertisement -

மேலும், இவர் 2017 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சினிமா வாய்ப்புகளுக்காக போராடி வருகிறார் நடிகை நமீதா. இந்நிலையில் நடிகை நமீதா அவர்கள் யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை பிரபல நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

Dance Jodi Dance | #Throwback

பல வருடங்களுக்கு பின் பரதநாட்டியம் ஆடிய நமிதா!? #Throwback #DJD #ZeeTamil

Zee Tamil ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಸೋಮವಾರ, ಏಪ್ರಿಲ್ 27, 2020

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக நடைபெற்ற நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ். இந்த டான்ஸ் நிகழ்ச்சியில் நமீதா அவர்கள் நடுவராக பங்கேற்று வந்தார். இதில் அவர் தான் கற்றுக்கொண்ட பரத நாட்டியம் திறமையை காண்பித்தார். பின் நமீதா அவர்கள் நான் ஏழு வருடங்களாக பரதநாட்டியம் கற்றுக் கொண்டேன். ஆனால், எங்கேயும் என்னால் அரங்கேற்றம் செய்ய முடியவில்லை.

-விளம்பரம்-

இந்த விஷயம் யாருக்கும் தெரியாது. இப்போது தான் கூறுகிறேன். இந்த நிகழ்ச்சியில் நான் பரதநாட்டியம் ஆடியது என் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இப்படி அவர் கூறி நடனமாடிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

தற்போது நடிகை நமீதா அவர்கள் அகம்பாவம் என்ற ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகி உள்ளார். இந்த படத்தை ஸ்ரீமகேஷ் இயக்குகிறார். இந்த படத்தின் தயாரிப்பாளரான வாராகி அவர்கள் கொடூரமான வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன், மனோபாலா, மாரிமுத்து, அப்புக்குட்டி, நாடோடிகள் கோபால், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்திற்காக நடிகை நமீதா அவர்கள் 10 கிலோவுக்கு மேல் உடல் எடையைக் குறைத்து உள்ளார் என்று கூறப்படுகிறது.

Advertisement