பாலாஜி, நித்யா மகள் போஷிகா கலைஞரை பற்றி ஆவேச பேச்சு..! வைரலாகும் வீடியோ

0
285
Poshika

திமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கடந்த செவ்வாய் கிழமை (ஆகஸ்ட் 7) மாலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரைத்துறை பிரபலங்களும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.

நேற்று (ஆகஸ்ட் 8) மாலை சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் அவர்களின் புகழுடல் அடக்கம் செய்யப்பட்டு இருந்தது. பல்வேறு பிரபலங்களும் கலைஞரின் இறுதி சடங்கில் பங்குபெற்றனர். இந்நிலையில் தற்போது பல்வேறு பிரபலங்களும் கலைஞரின் இறப்பு குறித்து தங்களது வருத்ததை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ பதிவில் பிக் பாஸ் போட்டியாளர் பாலாஜி -நித்யா தம்பதியரின் மகள் போஷிகா, கலைஞரின் மறைவு குறித்து மிகவும் நெகிழ்சியாக பேசியுள்ளார். அவரை போன்றே நடிகை ராதிகா, நடிகர் பார்த்திபன் உள்ளிட்டோரும் கலைஞர் அவர்களின் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த வீடியோ பதிவில் ”எங்கள் கலைஞரை எமனே அழைத்து சென்றாலும், அவரது பெயரையும் புகழையும் அவரது நினைவுகளையும் என்றும் எங்கள் மனதில் இருந்து அழிக்க முடியாது’ என்று மிகவும் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் போஷிகா. தற்போது அந்த வீடியோ சமூக வளைத்ததில் வைரலாக பரவி வருகிறது.