போஷிகாவை ஏமாத்தி பேச வெச்சாங்க.! பிக் பாஸ் காட்டியது பொய்.! என்ன விட்ருங்க ப்ளீஸ்.!

0
3019
Nithya
- Advertisement -

தாடி பாலாஜிக்கும் அவரின் மனைவி நித்யாவுக்கும் இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதா? பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நித்யா எலிமினேட் ஆன எபிசோடைப் பார்த்த அனைவரிடமும் எழுந்த கேள்வி இதுதான். சந்தோஷமான விஷயம்தானே’ என உறுதிப்படுத்திக்கொள்ள நித்யாவிடமே பேசினோம்.

-விளம்பரம்-

nithya bigg boss

- Advertisement -

என்னத்த சொல்றது? பிக் பாஸ் வீட்டுக்குள்ள நடக்கிறது ஒண்ணும் மக்கள் டிவி-யில பார்க்கிறது ஒண்ணுமா இருக்குங்கிறதுதான் என்னோட தனிப்பட்ட கருத்து. நான் எலிமினேட் ஆன எபிசோடுலேயே என் பொண்ணு போஷிகா பேசிய வார்த்தைகள் அவளாகப் பேசிய வார்த்தைகள் அல்ல. நானும் பாலாஜியும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள இணக்கமாயிட்டதா அந்தச் சின்னக் குழந்தைகிட்ட திரும்பத் திரும்பச் சொல்லியிருக்காங்க. `நாங்க சொல்றதைச் சொல்லணும்; அப்போதான் அம்மாவுக்குக் கெட்ட பெயர் வராது’னு எல்லாம் என்னென்னவோ சொல்லிப் பேச வச்சிருக்காங்க. அந்த இடத்துல எதுவும் பேச முடியாதவளா நான் இருந்தேன். தவிர, நான் அந்த இடத்துல பேசிய சில வார்த்தைகளும்கூட அப்படியே ஒளிபரப்பாகலை; எடிட் பண்ணியிருந்தாங்க. அதனால, டிவியில நிகழ்ச்சியைப் பார்த்தவங்க மத்தியில நாங்க ரெண்டுபேரும் சேர்ந்துட்ட மாதிரி ஒரு தோற்றம் உண்டாகியிருக்கு.

ஒரு விஷயத்தை மட்டும் நான் தெளிவா சொல்ல விரும்புறேன். எனக்கும் பாலாஜிக்கும் இடைப்பட்ட பிரச்னை இன்னும் அப்படியேதான் இருக்கு. ஆறேழு வருடமா அவஸ்தைகளை அனுபவிச்ச நான், ஒன்றரை மாசத்துல எப்படி மனசு மாறுவேன்? தவிர, பிக் பாஸ் வீட்டுக்குள்ள பாலாஜியின் நடவடிக்கைகள் ஆரம்பத்துல ஒரு மாதிரியும் அடுத்த சில நாள்கள்ல திருந்தின மாதிரியும் இருந்துச்சு. அதுல திருந்தின மாதிரியான விஷயங்களை என்னால நம்ப முடியலை. ஏன்னா, அவரோட குடும்பம் நடத்தினவ நான்.

-விளம்பரம்-

actor balaji

அவர் மீது எனக்கு அன்பு இருக்கு. ஆனா, அந்த அன்பை அவரால பாதுகாக்கத் தெரியலை. ஒருவேளை எங்க ரெண்டுபேரையும் சேர்த்து வைக்கணும்னு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துறவங்க நினைச்சாங்களா… தெரியலை. அப்படி நினைச்சிருந்தா, அந்த எண்ணம் நல்லதே! ஆனா, அதுக்கு ரெண்டு தரப்பு ஒத்துழைப்பும் அவசியம். ரெண்டு தரப்பும் உண்மையாகவும் இருக்கணும். பாலாஜி விஷயத்துல அந்த உண்மைத்தன்மை இல்லை என்பதுதான் நிஜம்.

பிறகு எதுக்கு பாலாஜி இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிறது தெரிஞ்சும் நீங்க கலந்துக்கிட்டீங்க’னு நீங்க கேட்கலாம். பிக் பாஸ் ஷோவுல கலந்துகொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சது. அது ‘தாடி’ பாலாஜி மனைவிங்கிறதுக்காகக் கிடைச்சதானு எனக்குத் தெரியாது. ஆனா, அந்த வீட்டுக்குள்ள நான் நானாகத்தான் நடந்துக்கிட்டேன். அதனாலேயோ என்னவோ அந்த வீடு எனக்கு செட் ஆகலை. அதனால, ஒரு வாரத்துலேயே எனக்கு வெளியேறணும்னு தோணுச்சு. கன்ஃபெஷன் அறைக்குள்ள போகிற ஒவ்வொரு முறையும் ‘என்ன விட்டுடுங்க பிக் பாஸ்… நான் வெளியே போகணும்’னு நானே கேட்க ஆரம்பிச்சேன். தொடர்ந்து நச்சரிச்சுக்கிட்டே இருந்தா என்ன செய்வாங்க, வெளியில அனுப்பிட்டாங்க. சுத்தி பொய்யா இருக்கிற இடத்துல என்னால நடிக்க முடியாதுங்க!

Thadi-Balaji-Wife

நான் வெளியில கிளம்பின அன்னைக்குகூட என் காதுபடவே, என்னைப் பத்தி அங்கே சிலர்கிட்ட கலாய்ச்சுக்கிட்டு இருந்தார் பாலாஜி. நானும் பதிலுக்கு இப்படிச் சொல்லிட்டு வந்தேன், ‘நீ உள்ளே இருக்கிறதுதான் எனக்கும் நல்லது. போய் விவாகரத்து தொடர்பான நீதிமன்ற வேலைகளை முடிச்சிடுறேன்!’ என்கிறார் நித்யா.

Advertisement