ஓவியா வெளியிட்ட போட்டோ.! ஷாக் ஆன ரசிகர்கள்.! அப்போ அது உண்மையா..? புகைப்படம் உள்ளே

0
1626
oviya-actress

விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி யாருக்கு பெரும் புகழையும் சம்பாதித்து தந்ததோ இல்லையோ, ஆரவிற்கும், நடிகை ஓவியாவிற்கும் பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. சொல்லப்போனால் ஆராவ், ஓவியாவை வைத்து தான் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் என்றும் கூறலாம்.

Oviya

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் மற்றும் ஓவியா ஜோடி தான் பிக் பாஸ் வீட்டின் லைம் லைட்டாக இருந்து வந்தனர். அதிலும் குறிப்பாக நடிகை ஓவியாவுக்கு அவரது உண்மையான குணத்திற்காக பல ரசிகர்கள் அவருக்கு சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மியை கூட தொடங்கினர்.

சமீபத்தில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் நடிகை ஓவியா சிறப்பு விருந்தினராக பங்குபெற்று இருந்தார். இதனை ட்விட்டரில் குறிப்பிட்டிருந்த பிரியா என்ற ரசிகை ஒருவர் ‘கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் ப்ரோ வெற்றி பெற்ற தருணமும், இந்த பிக் பாஸ் 2 வில் ஓவியா வந்த தருணமும் தான் பெஸ்ட், மற்றவை அனைத்தும் வேஸ்ட் . நான் இவர்கள் இருவரை மட்டும் தான் மிஸ் செய்கிறேன்’ என்பது போல பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் அந்த ரசிகையின் டீவீட்டிற்கு ரீ-ட்வீட் செய்திருந்த நடிகை ஓவியா, ஆராவுடன் இருக்கும் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனால் அந்த ரசிகை பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார். மேலும், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்கள் இன்னும் காதலித்து வருகிறார்களா என்று அதிர்ச்சியில் உள்ளனர்.