பிக் பாஸ் வீட்டுக்குள் ஓவியா.! எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா..? சிக்கிய ஆதாரம் இதோ

0
824
bigg-boss-oviya

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நேற்று முதல் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் பல்வேறு போட்டியாளர்கள் மத்தியில் சிறப்பு விருந்தினராக ஓவியா வந்திருந்தது ரசிகர்களுக்கு மிக பெரிய சர்ப்ரைசாக தான் இருந்தது.

oviya

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற 16 போட்டியாளர்களையும் பிக் பாஸ் வீட்டுக்குள் நடிகர் கமல் அனுப்பிய பிறகு நடிகை ஓவியா மேடைக்கு வந்திருந்தார். பின்னர் அவரிடம் ‘நீங்கள் விருந்தினராக வந்திருக்கிறீர்கள் என்று சக போட்டியாளர்களிடம் கூறாதீர்கள் அவர்கள் உங்களையும் போட்டியாளர் என்று நினைத்து கொள்ளட்டும் என்று கூறினார்.

பின்னர் பிக் பாஸ் வீட்டிற்குல் நடிகை ஓவியா சென்று அணைத்து போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தார். ஆனால், இந்த நிகழ்ச்சியில் அவர் ஒரு விருந்தினராக தான் சென்றுள்ளார் என்பது மக்களுக்கு தெரியும். இந்நிலையில் அவர் இன்றுடன் பிக் பாஸ் வீட்டிற்கு ‘குட் பை’ சொல்லி திரும்பப்போகிறார் என்று ஒரு சில தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது.

oviya-big-boss

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவை மீண்டும் வரவழைத்ததற்கு முக்கிய காரணமே, அவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை பயன்படுத்தி பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை ஒரு வாரமாவது கொஞ்சம் சுவாரசியமாக எடுத்து சென்று விடலாம் என்று கூட விஜய் டிவி எண்ணி இருக்கலாம் . அதனால் தான் அவரை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ என்ட்ரி செய்ய வைத்திருக்கலாம் என்று எண்ணம் தோன்றுகிறது.

மேலும் நேற்று பிக் பாஸ் வீட்டினுள் நடிகை ஓவியா உள்ளே நுழைந்த போது கூட, அவர் கையில் ஒரு பெட்டியுடன் தான் சென்றிருந்தார். அதனால் அவர் இன்னும் ஒரு சில நாட்களுக்கு பிக் பாஸ் வீட்டினுள் இருப்பார் என்று மற்றொரு எண்ணமும் நமது மண்டையில் ஓடிக்கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தால் “Bigg Boss Vote Tamil” என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களது வாக்குகளை செலுத்தி உங்களின் விருப்பமான போட்டியாளரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றலாம்.