நயன்தாரா படத்தில் நடித்துள்ள பூர்ணிமா, எந்த படத்தில் தெரியுமா? இதோ புகைப்படம்.

0
432
Nayan
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 8வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, பிராவோ, அக்ஷயா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் பரிட்சயமான முகங்களில் ஒருவர் பூர்ணிமா ரவி. கடலூரை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் ஒரு IT நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். பின்னர் அங்கே ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக இவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேசிய போது என்னை ஏன் வேலையில் இருந்து நீக்கிவிட்டார்கள் என்பதே தனக்கு தெரியாது என்றும் கூறி இருந்தார்.

- Advertisement -

வேலையை இழந்த பூர்ணிமா பின்னர் கன்டென்ட் கிரியேட்டராக மாரி ‘ஆராத்தி’ என்ற யூடியூப் சேனல் துவங்கினார். அதில் இவர் போட்ட வீடியோக்கள் படு ஹிட் அடய இவருக்கு 2 மில்லியனுக்கும் மேல் சப்ஸ்கிரைப்பர்ஸ் மேல் குவிய துவங்கினர். இதனை தொடர்ந்து இவர் ஒரு சில குறும்படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களில் நடித்தும் இருந்தார். இப்படி ஒரு நிலையில் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

இவர் நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே தற்போது வரை பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். குறிப்பாக, இவர் மாயாவுடன் சேர்ந்து கொண்டு செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் அளவே இல்லை.பிற போட்டியாளர்களை கிண்டல், கேலி செய்வது, நிகழ்ச்சியில் இருந்து அவர்களை தூக்க திட்டமிடுவது போன்ற பல வேலைகளை பூர்ணிமா செய்திருக்கிறார். இதுவரை அவர் சம்பாதித்த மொத்த பேரையும் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் கெடுத்து கொண்டார் என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-

ஒரு கட்டத்திற்கு மேல் இவர் எல்லை மீறி கமலஹாசனையே விமர்சித்து இருக்கிறார். மேலும், கமல் எது சொன்னாலும் சாரி என்று சொல்லி பேசியதை கேட்டு கமலே கொந்தளித்து அவரை திட்டியிருந்தார்.இருந்தாலும் பூர்ணிமா தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார். மேலும், தனக்கு சினிமாவில் நடிகையாக வேண்டும் என்பது தான் ஆசை என்றும் இவர் கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் இவர் நயன்தாராவின் படத்தில் நடித்துள்ளார். ஆம், ஜெய், நயன்தாரா நடித்துள்ள அன்னபூரணி என்ற படத்தில் பூர்ணிமா நடித்துள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. ட்ரைலரில் வரும் ஒரு சீனில் ஜெய், நயன்தாரா மற்றும் சில நண்பர்கள் கேரக்டர்கள் நின்று பேசிக்கொண்டிருக்கின்றனர். அதில் நயன்தாரா பக்கத்தில் பூர்ணிமா ரவி நின்று கொண்டிருக்கும் காட்சியை பார்த்து இணையவாசிகள் ஷாக்கில் உள்ளனர்.

Advertisement