விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள். அதில் தற்போது விஜய் தான் மக்களின் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது பிரியங்காவுக்கு தான். மேலும், இவர் வாயாடி தொகுப்பாளினி என்று பெயர் எடுத்தவர். இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது. இதனாலேயே இவர் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
அதிலும் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். இந்த சீசனில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரியங்கா இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார். பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இதையும் பாருங்க : இதுக்கு சிம்பு தான் காரணம் – திருமணத்துக்கு பின் பல ஆண்டு ரகசியத்தை உடைத்த விக்னேஷ் சிவன்- என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க
கணவரை பற்றி பேசாத பிரியங்கா :
ஆனால், பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா தன் கணவர் பற்றி பேசவே இல்லை, ப்ரீஸ் டாஸ்கில் கூட அவரது கணவர் வரவில்லை இதனால் பிரியங்கா தன் கணவரை பிரிந்துவிட்டதாக பலரும் புரளிகளை கிளப்பினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன் முறையாக பிரியங்கா லைவில் வந்த போது கூட அவரது ரசிகர்கள் பலரும் பிக்பாஸ் வீட்டில் ஏன் பிரவீனை பற்றி பேசவில்லை. பிரவீன் எங்கே? என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இதை பார்த்தவுடன் பிரியங்கா, எல்லோரும் பிரவீனை பற்றி கேட்கிறீர்கள்.
கணவர் குறித்து பிரியங்கா சொன்ன விஷயம் :
இதற்கான பதிலை நான் அடுத்த பதிவில் சொல்கிறேன் என்று கூறியிருந்தார். ஆனால், தன் கணவர் குறித்து இதுவரை பிரியங்கா எதுவும் சொல்லவில்லை. அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு வெளிவந்த வீடியோவிலும் பிரியங்கா பிரவீனை பற்றி கேட்டதற்கு அவருக்கு கேமரா முன் வருவதற்கு கூச்சம். அதுமட்டுமில்லாமல் அவர் கேமரா முன்பு அதிகமாக வர மாட்டார் என்று கூறியிருந்தார்.
திருமணம் குறித்து கேட்ட ரசிகர் :
இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் ஒருவேளை இதனால்தான் பிரியங்கா, பிரவினை பற்றி பேசவில்லையோ? இருவருக்கும் இடையே ஏதாவது பிரச்சனையா? என்று பல யூகங்கள் கிளம்பிவிட்டது. அவ்வளவு ஏன் சமீபத்தில் பிரியங்காவின் சகோதரனுக்கு குழந்தை பிறந்து இருந்தது. அப்போது கூட பிரியங்கா தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிடவில்லை.இப்படி ஒரு நிலையில் பிக் பாஸுக்கு பின் முதன் முறையாக கணவர் பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார் பிரியங்கா.
பிரியங்கா சொன்ன பதில் :
இந்நிலையில், ரசிகர் ஒருவர், திருமணமான பிறகும் எப்படி எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறீர்கள் என்று ப்ரியங்காவிடம் கேட்டுள்ளார். அதற்கு ப்ரியங்கா, உங்களைப் புரிந்துகொள்ளும் கணவர் இருந்தால், அவருக்கு நீங்கள் விசுவாசமாக இருந்தால் எல்லாம் சாத்தியமாகும் என்று பதிலளித்துள்ளார். இதனால், ப்ரியங்கா அவரது கணவரை விவாகரத்து செய்து விட்டாரா என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.