13 வருடம், அப்பாவை நினைத்து மேடையில் கலங்கிய பிரியங்கா – வைரலாகும் நெகிழ்ச்சியான வீடியோ.

0
326
Priyanka
- Advertisement -

விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் தற்போது விஜய் டிவியில் மக்களின் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது பிரியங்காவுக்கு தான். மேலும், இவர் வாயாடி தொகுப்பாளினி என்று பெயர் எடுத்தவர். இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது. இதனாலேயே இவர் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இதனிடையே பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரவீன் குமாரும் விஜய் டிவியின் தயாரிப்பு குழுவில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரியங்கா திருமணத்திற்க்கு பிறகு தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து செய்து வருகிறார். மேலும், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு,ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாகியாக தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு கலக்கபோவது யாரு என்ற நிகழ்ச்சியில் இவர் நடுவராகவும் பங்கு பெற்று இருக்கிறார்.

இதையும் பாருங்க : ‘நான் அழக்கூடாது என்பதை புரிந்து கொண்டேன், ஏன் என்றால்’ – தன் கணவரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் சேதுராமன் மனைவியின் உருக்கமான பதிவு.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா:

சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள ப்ரியங்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அதோடு இந்த நிகழ்ச்சியில் முகம் தெரிந்த நபர் என்றால் சிலர் தான். அதில் தொகுப்பாளினி பிரியங்காவும் ஒருவர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா மிகத் திறமையாக விளையாடி வந்தார். பல பிரச்சனைகளில் பிரியங்கா சிக்கி இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். அதுமட்டும் இல்லாமல் பல முறை எவிக்சனில் பிரியங்கா வந்து இருந்தாலும் மக்கள் அவரை காப்பாற்றினார்கள். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை நிகழ்ச்சியில் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

ப்ரியங்காவின் யூடியூப் சேனல்:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா வழக்கம் போல் தன்னுடைய தொகுப்பாளினி வேலையை தொடங்கி விட்டார். அதுமட்டும் இல்லாமல் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். அதில் அவர் செய்யும் காமெடி குறும்பு வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்கள். இதனால் இவரை லட்சக்கணக்கான நபர்கள் பாலோ செகிறார்கள். சமீபத்தில் கூட பாவனியின் சொந்த ஊரான ஹைதராபாத்துக்கு அபிஷேக், மது, பிரியங்கா ஆகியோர் சென்ற போது அங்கு செய்த லூட்டி வீடியோக்களையும் பிரியங்கா தன்னுடைய சேனலில் இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் பிரியங்காவிற்கு ஐகானிக் வுமன் என்ற விருது கிடைத்திருக்கிறது. பிரியங்கா தொகுப்பாளினியாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஓடிவிட்டது.

-விளம்பரம்-

ப்ரியங்காவிற்கு கிடைத்த விருது:

இதற்காக சமீபத்தில் இவருக்கு கலாட்டா யூடியூப் சேனல் சார்பாக ஐகானிக் உமன் விருது வழங்கப்பட்டது. அந்த விருதை பெறும்போது பிரியங்கா ரொம்ப எமோஷனலாக பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, பல தடைகளை தாண்டி தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். பதிமூன்று வருடங்களாக தினமும் டிவியில் இந்த முகத்தைப் மக்கள் பார்த்துள்ளார்கள். அதற்காக பெருமைப்படுகிறேன், ஒரு சுட்டித்தனம் செய்யும் கலாட்டா பெண்ணுக்கு கலாட்டா விருது கிடைத்திருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எவ்வளவு சோகமாகவோ, பிரச்சனை வந்தாலும் மேடை ஏறி விட்டேன் என்றால், எல்லோரையும் சந்தோசப்படுத்த வேண்டும் என்று கவலை எல்லாம் மறைத்துக் கொண்டு இருப்பேன்.

மேடையில் பிரியங்கா பேசியது:

இது நான் என் அம்மாவிடம் கற்று கொண்டது தான். என் அப்பா நியாபகம் என் அம்மாவிற்கு வந்தாலும் அதை எங்களிடம் காண்பித்து கொள்ள மாட்டார். எங்கம்மா வாழ்க்கையே சாக்ரிஃபைஸ் பண்ணி எனக்காகவும் என் தம்பிக்கும் வாழ்ந்தார். அவர் இல்லை என்றால் நாங்கள் இல்லை. அதேபோல் என்னை விரும்புற அனைவருக்குமே நான் நிறைய அன்பை கொடுப்பேன். வெறுப்பவர்களுக்கும் என் அன்பை கொடுப்பேன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மோசமான கமெண்டுகள் வந்தது. அது என்னை மிகவும் வேதனைப் படுத்துகிறது. தயவுசெய்து கஷ்டப்படுத்தி கமண்ட் பண்ணாதீர்கள் என்றும் கோரிக்கை வைத்தார். இப்படி பிரியங்கா விருது வாங்கிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் பிரியங்காவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.

Advertisement