‘நிறைய பெத்துக்கனும்’ குழந்தை குறித்து சொன்னதும் தேம்பி தேம்பி அழுத பிரியங்கா. அன்பிற்காக ஏக்கம்.

0
295
- Advertisement -

அன்புக்காக ஏங்கும் தொகுப்பாளினி பிரியங்காவின் சோகமான பக்கம் குறித்து பலரும் அறியாத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது பிரியங்காவுக்கு தான். இவர் வாயாடி தொகுப்பாளினி என்று பெயர் எடுத்தவர். இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது. அதிலும் இவரின் பிரபலமே சிரிப்பு தான்.

-விளம்பரம்-
Priyanka

இதனாலேயே இவர் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். பின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகிறார். பின் இவர் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.

- Advertisement -

தொகுப்பாளர் பிரியங்கா குறித்த தகவல்:

இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா மிகத் திறமையாக விளையாடி வந்தார். பல பிரச்சனைகளில் பிரியங்கா சிக்கி இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். பின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் நிகழ்ச்சியில் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா வழக்கம் போல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இப்படி இவர் கேரியரில் வெற்றி அடைந்தாலும் குடும்ப வாழ்க்கையில் தோற்றார் என்றே சொல்லலாம்.

priyanka

பிரியங்கா திருமணம்:

பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் இவர்கள் திருமண வாழ்க்கை நன்றாக சென்றது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பிரியங்கா எந்த ஒரு பதிவிலும், நிகழ்ச்சியிலும் தன் கணவரை பற்றி பதிவிடவில்லை. இதனால் பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதேபோல் பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா தன் கணவர் பற்றி பேசுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் பேசவே இல்லை. இதனால் பிரியங்கா தன் கணவரை விட்டு பிரிந்துவிட்டதாக பலரும்கூறி இருந்தார்கள்.

-விளம்பரம்-

பேட்டியில் ப்ரியங்கா சொன்னது:

மேலும், இது குறித்து பலரும்கூறி ரசிகர்கள் கேட்டு இருந்தார்கள். ஒருவழியாக பிரியங்கா தன் கணவரை பிரிந்து விட்டதாக ஓத்து கொண்டார். ஆனால், பிரிவிற்கான காரணம் குறித்து எதுவும் சொல்லவில்லை. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரியங்கா, என்னுடைய தம்பியின் மகள் தான் என்னுடைய உலகமே. எங்களுடைய குடும்பத்தை ஒட்டுமொத்தமாக மாற்றியது அவள் தான். அவளுடைய அன்புக்காக நான் ரொம்ப ஏங்குகிறேன். அதுபோன்ற காதலை எனக்கு கொடுங்கள். மற்ற அனைத்தையும் நான் தருகிறேன். வேறு எதுவுமே எனக்கு வேண்டாம்.

அர்ச்சனா சொன்ன ஆறுதல்:

அவளுக்காக நான் எது வேண்டுமானாலும் செய்வேன். அத்தை என்னும் உறவை தாண்டி அவள் மீது அதிக அன்பு வைத்திருக்கிறேன் என்று சொன்னார். இதற்கு தொகுப்பாளர் அர்ச்சனா, நீ நினைத்தபடி உன்னை உருகி உருகி காதலிக்கும் ஒருத்தர் உன் வாழ்க்கையில் கண்டிப்பாக வருவார். நீ நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்காக நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். உன் மகன், மகளை நான் பார்க்க வேண்டும் என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் பிரியங்கா கண்கலங்கி அழுதுவிட்டார். அனைவரையுமே சிரித்து வைத்த பிரியங்காவிற்குள் இப்படி ஒரு சோகம் இருப்பதை அறிந்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Advertisement