96 பட ஜானு கெட்டப்பில் பிரியங்கா வெளியிட்ட புகைப்படம் – திரிஷா போட்ட கமன்ட். ரசிகர்களின் ரியாக்ஷனை பாருங்க.

0
582
- Advertisement -

விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் மக்களின் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது. அதிலும் இவரின் பிரபலமே சிரிப்பு தான். இதனாலேயே குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரியங்கா பிரபலமானார். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

பின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையே பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரவீன் குமாரும் விஜய் டிவியின் தயாரிப்பு குழுவில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரியங்கா திருமணத்திற்க்கு பிறகும் தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து செய்து வருகிறார். மேலும், சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள ப்ரியங்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா:

அதோடு இந்த நிகழ்ச்சியில் முகம் தெரிந்த நபர் என்றால் சிலர் தான். அதில் தொகுப்பாளினி பிரியங்காவும் ஒருவர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா மிகத் திறமையாக விளையாடி வந்தார். பல பிரச்சனைகளில் பிரியங்கா சிக்கி இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். அதுமட்டும் இல்லாமல் பல முறை எவிக்சனில் பிரியங்கா வந்து இருந்தாலும் மக்கள் அவரை காப்பாற்றினார்கள். பின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் நிகழ்ச்சியில் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா வருமானம்:

மேலும், பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா ஒரு வாரத்திற்கு இரண்டு லட்சம் என்று அடிப்படையில் கிட்டத்தட்ட பிக் பாஸ் வீட்டில் 15 வாரம் இருந்தார். அதனால் 15 * 2 laks = 30laks. ஆகமொத்தம் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து சம்பாதித்த பணம் 30 லட்சம். இதில் 30% டாக்ஸ் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடி இருந்தார். அதுமட்டுமில்லாமல் பேட்டியும் கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பிரியங்கா:

அதில் ரசிகர்கள் பலர் நீங்கள் மீண்டும் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக எப்ப வரீங்க? என்றெல்லாம் கேட்டு இருந்தார்கள். அதற்கு ஏற்றவாறு விஜய் டிவியில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. இதை மாகாபா, பிரியங்கா தான் பல வருடமாக தொகுத்து வழங்கி இருந்தார்கள். ஆனால், இந்த வருடம் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற உடன் இந்த நிகழ்ச்சியை மாகாபா உடன் சேர்ந்து மைனா நந்தினி தொகுத்து வழங்கியிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்று மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.

ப்ரியங்காவின் 96 படம் கெட்டப்:

இவர் வந்த உடன் நிகழ்ச்சியே களை கட்டி இருக்கிறது. இந்நிலையில் பிரியங்கா புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், 96 படத்தில் திரிஷாவின் கெட்டப்பில் பிரியங்கா உடை அணிந்து இருக்கிறார். அந்த புகைப்படத்தை பிரியங்கா ‘ஜானு’ என்று என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த 96 படத்தின் ரியல் ஜானு திரிஷா, ‘ஹாஹாஹா லவ்’ என்று பதிவிட்டிருக்கிறார். உடனே பிரியங்கா இதை பார்த்துவிட்டு மன்னிச்சிடுங்க என்று கமென்ட் போட்டு இருக்கிறார். இப்படி இவரின் புகைப்படமும், பதிவும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement