தல, தளபதி குறித்து ஒரே வரியில் ரம்யா பாண்டியன் கூறிய விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக ரம்யா பாண்டியன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் 2015ஆம் ஆண்டு வெளிவந்த டம்மி பட்டாஸ் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து வரும் ஜோக்கர், ஆண்தேவதை போன்ற படங்களில் நடித்தார். இவர் என்னதான் படங்களில் நடித்திருந்தாலும் இவரை தமிழக மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது குக் வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் போட்டியாளராக இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ஆர்மி உருவாகியது. இந்த நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் அவர்கள் கடைசி வரை தாக்குபிடித்து 100 நாட்கள் வரை இருந்தார். பின் கடைசியில் வைத்த போட்டியில் கூட இவர் சிங்கம் பெண்ணாக வெளியேறியது அனைவருக்குமே தெரியும். மேலும், இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி அதை ஷேர் செய்து இருப்பார்.
இந்த நிலையில் ரம்யா பாண்டியன் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதில் அவர் கூறியது, எங்கள் வீட்டில் நடந்த விழா ஒன்றில் தல அஜித் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். அது எனக்கு பெருமையாக இருக்கிறது. அது மட்டுமில்லாமல் அவர் எங்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும் நின்று நிதானமாகப் பேசினார். அதைப்போல் தளபதி விஜய் அவர்களை நான் சிறுவயதிலிருந்தே பார்த்து வருகிறேன்.
அப்போது இருந்ததை போலவே அவர் இப்போதும் மிக இளமையாக இருக்கிறார். மொத்தத்தில் ‘தளபதி யங், தல கிங்’ என்று இருவரையுமே ஒரே வரியில் புகழ்ந்து தள்ளியுள்ளார். இப்படி ரம்யா பாண்டியன் பேசிய விசயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.