வனிதாவை தொடர்ந்து நயன் வாடகை தாய் விவகாரத்தில் பிக் பாஸ் பிரபலம் போட்ட பதிவு.

0
379
Reshma
- Advertisement -

ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் எதிர்பார்த்து காத்து இருந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. அதோடு கடந்த ஜூன் மாதம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்தது விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் தான். மேலும், திருமணம் முடிந்த கையுடன் இந்த தம்பதிகள் ஜோடியாக ஹனி மூன் சென்று இருந்தனர்.இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-
nayan

இதுபற்றி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருமே தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்து இருந்தார். இதை தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை கூறி வந்தாலும் பலர் கல்யாணம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில் எப்படி நயன்தாரா குழந்தை பெற்றார்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினர் இரட்டை ஆண் குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக இணை இயக்குநர் தலைமையிலான குழு விசாரணையை துவங்கியுள்ளது.

- Advertisement -

மருத்தவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் விசாரணை முடிந்த பிறகு தேவைப்பட்டால் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியிடம் விசாரணை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி நயன்தாரா குழந்தைக்கு தாயான விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்து இருக்கும் நிலையில் பல பிரபலங்கள் நயனுக்கு ஆதாரவாக பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் இரண்டாவது மனைவியாக நடித்து வரும் ரேஷ்மா, நயன்தாராவின் பெயரை குறிப்பிடாமல் ட்வீட் செய்திருக்கிறார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது, இந்த உலகில் அடுத்தவர்களுக்காக சந்தோஷப்படுவது இல்லை. விளாசுவது, யூகிப்பது, குற்றும் சாட்டுவது, அடுத்தவர்களை கஷ்டப்படுத்தி இன்பம் காண்பது. இது தான் தற்போதைய கொடூர உலகில் நடக்கிறது என்றார். ரேஷ்மா யார் பெயரையும் குறிப்பிடாவிட்டாலும் அவர் நயன்தாராவை பற்றி தான் பேசுகிறார் என்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் ரேஷ்மா கூறியது மிகச் சரி என்று தெரிவித்துள்ளார் வனிதா விஜயகுமார்.

-விளம்பரம்-

ஏற்கனவே வனிதாவும் இந்த விவகாரத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில் ‘அன்பான பெற்றோருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளின் பிறப்பை விட அழகானது என்ன இருக்க முடியும். ஒருவருடைய வாழ்க்கையின் மிக அழகான தருணங்களை கெடுப்பவர்களை முதலில் சட்டப்படி தண்டிக்க வேண்டும். லீகல் தெரியும், மருத்துவம் தெரியுமென்று சில மதிப்பில்லாத கோமாளிகள் பேட்டி கொடுப்பதும், ட்வீட் போடுவதும் திருந்தவே மாட்டீங்களா? கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். முட்டாள்கள் ஆகிய நீங்கள் இதையெல்லாம் விட்டுவிடப் போகிறீர்கள் என்று நினைக்கிறீர்களா? விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஒரு அழகான பெற்றோராக மிகவும் மகிழ்ச்சியான பயணத்தை தொடங்குங்கள். யார் என்ன சொன்னாலும்? நீங்கள் அதை கண்டு கொள்ளாதீர்கள். குழந்தைகளை பெறுவது நீங்கள் செய்த மிக சிறந்த விஷயம். குழந்தைகளுடன் தகுதியான அன்புடனும், அக்கறையுடனும் ஒவ்வொரு கணத்தையும் அனுபவியுங்கள். கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். உங்களை ஆசீர்வதிக்கட்டும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement