சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து விலகிய ரேஷ்மா – அவருக்கு பதில் நடிக்க வந்த பிரசாந்த் பட நடிகை.

0
16267
reshma
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரேஷ்மா. ஆனால், அதற்கு முன்பாகவே “புஷ்பா புருஷன்” என்ற டயலாக் மூலம் மக்களிடையே பிரபலமானார். இவர் ஒரு விமான பணிப் பெண்ணாக பணி புரிந்து உள்ளார். இதற்கு பிறகு தான் நடிகை ரேஷ்மா அவர்கள் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தான் முதலில் அறிமுகமானர்.ஆரம்பத்தில் தெலுங்கு தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளனாக இருந்துள்ளார் ரேஷ்மா.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வாணி ராணி’ தொடர் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் வம்சம், மரகத வீனை,பகல் நிலவு போன்ற பல்வேறு தொடர்களில் நடித்து வந்தார். தற்போது அன்பே வா கண்ணான கண்ணே, அபி டைலர் உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

மேலும், இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அன்பே வா’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் இருந்து இவர் விலகிவிட்டார். இவருக்கு பதிலாக பிரசாந்த் பட நடிகை வினோதினி நடிக்க இருக்கிறார். நடிகை ரேஷ்மா, விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி தொடரில் நடித்து வருகிறார்.

May be an image of 2 people

இதனால் தான் இவர் ‘அன்பே வா’ தொடரில் இருந்து விலகிவிட்டார் என்று கூறப்படுகிறது. பாக்யலட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபர் இந்த சீரியலில் இருந்து விலகியதால் தான் ரேஷ்மாவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. அது போக நடிகை ரேஷ்மா பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement