நேற்றய நிகழ்ச்சியில் கெட்ட வார்த்தையில் திட்டினாரா சுரேஷ் ? – வைரலாகும் வீடியோ.

0
1668
suresh

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருவது சுரேஷ் சக்ரவர்த்து தான். ஆரம்பத்தில் இவரை அனைவருமே ஒரு டெரரான பீஸ் என்றுதான் நினைத்தார்கள். அதேபோல இவர் இந்த சீசன் வனிதா என்றும் பலரும் விமர்சித்து வந்தார்கள். ஆனால் போகப்போக இவர் செய்யும் சேட்டைகளை பார்த்து இவருக்கு என்று ஒரு தனி ஆர்மியே அமைந்துவிட்டது. என்னதான் ஒரு சில நேரத்தில் மற்ற போட்டியாளர்களை வேண்டுமென்றே வம்பு இழுந்தாலும் டாஸ்க் என்று வந்துவிட்டால் சுரேஷ் மற்ற போட்டியாளர்களை விட மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதேபோல தான் செய்யும் தவறுகளை மிகவும் நேர்மையாக ஒப்புக் கொள்கிறார் இதனாலேயே இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்து வருகிறது.சுரேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த முதல் நாளே பாலாஜி முருகதாஸின் ஜாதியை கேட்டதாக ஒரு சர்ச்சை கிளம்பியது. இப்படி ஒரு நிலையில் இவர் அடுத்த சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.

நேற்றய நிகழ்ச்சியில் ஒரு டாஸ்க்கின் போது சுரேஷ் சக்ரவத்தி எதார்த்தமாக சுமங்கலி யாராவது வந்து விளக்கேட்ருங்கள் என்று கூறி இருந்தார். ஆனால், சிறிது நேரம் கழித்து பேசிய அனிதா, சுரேஷ் சார் ‘சுமங்கலி யாரவது விளக்கேற்றுங்கள் என்று என்னை சொன்னது சந்தோசம் தான். ஆனால், சுமம்ங்களி மட்டும் தான் விளக்கேற்ற முடியுமா ? அமங்கலியாக இருந்தால் ஏற்றக்கூடாத என்று எதோ தன்னுடைய வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றை கூறி இருந்தார். ஆனால், அனிதா சொன்ன இந்த விஷயம் சுரேஷ் உட்பட பலரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது.

- Advertisement -

ஒரு நல்ல நாளில் இப்படிஎல்லாம் பேச வேண்டுமா என்று பலரும் வருத்தப்பட்டனர். அதே போல சுரேஷ் கூட, அந்த பெண் வேண்டுமென்றெ என் பெயரை கெடுக்க இப்படி பேசுகிறது. இது ஒரு மிகப்பெரிய கெட்ட பெயரை எனக்கு ஏற்படுத்திவிடும் என்று கூறி இருந்தார். மேலும், நிஷா, ரியோ, அர்ச்சனா என்று பலரும் அனிதா சொன்னது தவறு என்று அவருக்கு அறிவுறுத்தினர். பின்னர் தான் செய்தது தவறு என்று சுரேஷிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால், சுரேஷ் அவரின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

உன்னிடம் நான் பேச விரும்பவில்லை உன் காலில் கூட விழுகிறேன் என்னை விட்டுவிடு என்று கூறிவிட்டார் சுரேஷ். இப்படி ஒரு நிலையில் நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி இருவரும் இதுகுறித்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது சுரேஷ், நான் எல்லார்கிட்டயும் நன்றாகத்தான் பேசுறேன் இந்த முண்டைகிட்டையும் பேசுறேன். இது கிட்ட பேசும்போது அது கிட்ட பேசணும் என்றுதான் பேசிவிட்டேன். இந்த மாதிரி அசிங்கப் படுத்த கூடாது இல்ல என்னை பற்றி தெரியும் இல்ல நான் திருப்பிக் கொடுத்தால் ரொம்ப கேவலமா இருக்கும். இந்த பிள்ளைக்கு நான் என்ன செய்தேன் எவ்வளவு அசிங்கம். உனக்கு எப்படி உன்னுடைய ஸ்டாண்ட் அப் காமெடி மீது மரியாதை இருக்கிறதோ நான் ஒரு ஏக்கர் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த ஆன்கர்.

-விளம்பரம்-

எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு. இப்படி எல்லாம் இலக்கணம் தவறக்கூடாது. ட்ரெண்டிங் என்ற விஷயம் இருவருக்கும் கொடுக்கும் போது தெரிய வேண்டாம். இதுக்கு தான் நெகடிவ் ட்ரெண்டிங்னு பேசி இருந்தார். சுரேஷ் பேசிய இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சுரேஷ் ‘முண்டை’ என்ற வார்த்தையை சொன்னதாக கூறி வருகின்றனர். ஆனால், அவர் பொண்ணுகிட்ட என்று சொன்னாரா இல்லை முண்டகிட்ட என்று சொன்னாரா என்று பலரும் சமூக வலைதளத்தில் விவாதித்து வருகின்றனர்.

Advertisement