கணவர் செய்த துரோகம், உறுதுணையாக நின்ற பாவனா – முதன் முறையாக தனது கணவர் குறித்து மனம் திறந்த பிக் பாஸ் சம்யுக்தா

0
3321
Samyuktha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது

-விளம்பரம்-

கொரோனா காலகட்டத்தில் என்னுடைய கணவர் துபாயில் வேறொரு பெண்ணை விட நாங்களும் 4 வருடம் தொடர்பில் இருந்தார் என்பது எனக்கு தெரிய வந்தது இதைக் கேட்டவுடன் எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது. இந்த நேரத்தில் பயணம் செய்ய முடியாமல் காரணம் கொரோனவாக இருந்தது.கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது நான் அப்போது உடைந்து போய் இருந்தேன்.அப்போதுதான் நிகழ்ச்சி ஒன்றில் பாவனாவை சந்தித்தேன் அவர் என்னுடைய பள்ளியில் சீனியர் என்பதால் வாக்கிங் போகலாம் என்று அழைத்தார். நானும் அவருடன் வாக்கின் சென்றபோது அவர் என்னைப் பற்றிக் கேட்கும் போது நான் என் மனதில் உள்ள அனைத்தையும் அவரிடம் கொட்டி தீர்த்து விட்டேன்.

- Advertisement -

அதனைக் கேட்ட பிறகு அவர் எனக்கு ஆறுதல் அளித்தது மட்டுமல்லாமல் என்னை பிக் பாஸ் சீசனில் பரிந்துரையும் செய்தார். அவர் பள்ளியில் சீனியர் என்பதால் ஐந்து வருடங்கள் சீனியர் அல்ல அவர் என்னை விட ஒரு வருடம் தான் பள்ளியில் சீனியர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பரிந்துரை செய்தது தான் என் வாழ்க்கையில் மிக முக்கிய புள்ளியாக மாறியது. ஒருவர் மற்றொருவருடன் உறவில் இருக்கிறார் என்ற போது ரூடாகத்தான் நடந்து கொள்வார். இவரும் அப்படித்தான் என் மீது வன்முறையாக நடந்து கொண்டார் என்று தெரியும் போது தான் அவர் வேறொரு பெண்ணிடம் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது.

அந்த நேரத்தில் எனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்தேன். அவர் இந்த நாட்டிலேயே கிடையாது நமக்கென்று ஒரு குழந்தை உள்ள போக அந்த குழந்தைக்கு இருவரும் தான் பொறுப்பு. அப்புறம் இருக்க வேண்டும் அப்படிப்பட்ட நேரத்தில் ஒருவர் மட்டும் விட்டுச் செல்லும்போது அந்த விஷயத்தில் என்ன செய்ய முடியும் என்று அவர் பேசி இருந்தார். இன்னும் நான் அந்த பிரிவில் இருந்து வெளியே வர முடியாமல் இருக்கிறேன். சில நாட்களில் இந்த பிரிவு எனக்கு ஓகே என்று தான் தோன்றும்.

-விளம்பரம்-

ஆனால் பல நேரங்களில் அதை நினைத்து நான் வருத்தப்பட்டு கொண்டிருப்பேன். நான் இப்போது அவருக்காக காத்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அந்த விஷயத்தில் நான் உடைந்து போய் இருக்கின்றேன். என்னுடைய மகன் அப்பா எங்கே அப்பா எங்கே என்று கேட்கும் போதெல்லாம் வேலையில் இருக்கிறார் அவரால் தற்போது இங்கு வர முடியாது என்று அவனிடம் பொய் சொல்லி வருகிறேன். ஆனால் விவாகரத்து தரலாம் என்று எண்ணினால் அவர் இங்கு வர மறுக்கிறார். அதனால் நான் சிக்கிக் கொண்டு இருக்கிறேன் ஆகையால் வாழ்க்கையில் சரியான துணைவரை தேர்ந்தெடுப்பது மிக மிக முக்கியம் என்றும் சம்யுக்தா பேசி இருந்தார்.

Advertisement