கலர்ஸ் தமிழ் சீரியலில் அறிமுகமாகியுள்ள சம்யுக்தா – என்ன சீரியல் தெரியுமா ? இதோ புகைப்படம்.

0
1057
samyuktha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

இந்த சீசனில் பாலாஜி, சம்யுக்தா, சோம் சேகர் என்று ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். அதில் சம்யுக்தா, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சந்திரகுமாரி’ தொடரில் நடித்து இருக்கிறார்.சம்யுக்தாவிற்கு திருமணமாகி 5 வயதில் ஒரு மகனும் இருக்கிறார். அவர் பிறந்து ஆறு மாதத்திலேயே நான் ரேம்ப் வாக் செய்ய வந்துவிட்டேன் என்று சம்யுக்தா பிக் பாஸில் கலந்துகொண்ட போது கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : இந்தியன் 2வில் விவேக் நடித்த காட்சிகளை இப்படித்தான் மாற்றப் போகிறாராம் ஷங்கர். நல்ல ஐடியா தான்!

- Advertisement -

பிக் பாஸில் ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் ஆதரவு இருந்தது. ஆனால், இவர் பாலாவுடன் சேர்ந்து ஆரியை டார்கெட் செய்ய ஆரம்பித்ததும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு குறைந்தது. அதிலும் ஆரி விஷயத்தில் கலீஜ் மற்றும் வளர்ப்பு மேட்டர் இவர் மீது ரசிகர்களுக்கு வெறுப்பை உண்டாக்கியது. பொதுவாக பிக் பாஸ் பிரபலங்களுக்கு சினிமா வாய்ப்பு வருவது வாடிக்கையான ஒன்று தான்.

அந்த வகையில் நடிகை சம்யுக்தா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு சில படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். அதே போல விஜய் சேதுபதி நடித்து வரும் துக்லக் தர்பார் படத்திலும் நடிகை சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் ஆகியுள்ளார். சமீபத்தில் கூட ராஜா ராணி பாரதி கண்ணம்மா சங்கமத்தில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அம்மன்’ சீரியலில் ஒரு சிறு ரோலில் நடிக்க இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement