அட, நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் சம்யுக்தா – இவங்களுக்கும் சம்யுக்தாவிற்கும் இப்படி ஒரு உறவா? வைரலாகும் புகைப்படம்.

0
6696
sam
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

இந்த சீசனில் பாலாஜி, சம்யுக்தா, சோம் சேகர் என்று ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். அதில் சம்யுக்தா, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சந்திரகுமாரி’ தொடரில் நடித்து இருக்கிறார்.சம்யுக்தாவிற்கு திருமணமாகி 5 வயதில் ஒரு மகனும் இருக்கிறார். அவர் பிறந்து ஆறு மாதத்திலேயே நான் ரேம்ப் வாக் செய்ய வந்துவிட்டேன் என்று சம்யுக்தா பிக் பாஸில் கலந்துகொண்ட போது கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : கவுண்டமணி மன்னிப்பு கேட்டால் ஷூட்டிங்க்கு வருவேன் – பலர் முன் கமலை கேலி செய்துள்ள கவுண்டமணி. அப்படி என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

- Advertisement -

பிக் பாஸில் ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் ஆதரவு இருந்தது. ஆனால், இவர் பாலாவுடன் சேர்ந்து ஆரியை டார்கெட் செய்ய ஆரம்பித்ததும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு குறைந்தது. அதிலும் ஆரி விஷயத்தில் கலீஜ் மற்றும் வளர்ப்பு மேட்டர் இவர் மீது ரசிகர்களுக்கு வெறுப்பை உண்டாக்கியது. மேலும், இவர் பிரபல தொகுப்பாளினி பாவனாவின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு நிலையில் சம்யுக்தா, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. உண்மையில் நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு சமுயுக்தா நெருங்கிய நட்பு கொண்டவராம். மேலும், இந்த புகைப்பங்கள் கூட கடந்த 2019 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் பிறந்தநாள் கொண்டாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement