விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பானது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் இருந்தது.
கடந்த சில வாரங்களுக்கு முன் குக் வித் கோமாளியின் பைனல் படப்பிடிப்பு நடந்து முடிந்து. இறுதி போட்டிக்கு பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், ஷகீலா, பவித்ரா ஆகிய 5 பேர் தகுதி பெற்று இருந்த நிலையில் இறுதி போட்டியில் சிறப்பு விருந்தினராக சிம்பு வந்திருந்தார்.இந்த சீசனில் யார் வெற்றிபெறுவார்கள் என்று மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த சீசனில் கனி முதல் இடத்தையும், ஷகீலா இரண்டாம் இடத்தையும், அஷ்வின் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
இதையும் பாருங்க : மான் கராத்தே படத்தில் நடித்துள்ள ரோஜா சீரியல் நடிகை – இதுவரை நோட் பண்ணி இருக்கீங்களா ?
இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளதால், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசனை தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். ஓரிரு மாதத்தில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட வாய்ப்புள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் குக்கு வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் பங்குபெற விருப்பம் தெரிவித்துள்ளார் சனம் ஷெட்டி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பல்வேரு பிக் பாஸ் பிரபலங்களுக்கு விஜய் டிவி தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகிறது. பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்குபெற்ற சனம் இதுவரை எந்த விஜய் டிவி நிகழ்ச்சியிலும் வாய்ப்பை பெறவில்லை. எனவே, குக்கு வித் கோமாளி 3யில் ஆவது சனமிற்கு விஜய் டிவி வாய்ப்பளிக்குமா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.