சனம் ஷெட்டியின் முன்னாள் காதலருக்கு பிறந்த குழந்தையை கொஞ்சி விளையாடிய பாலாஜி. (அட, இவரும் நடிகர் தாங்க)

0
632
sanam
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் நடிகை சனம் ஷெட்டி. என்னதான் இவர் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும். சீசன் 3 போட்டியில் கலந்துகொண்ட தர்ஷன் மூலம் தான் பிரபலமானார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்ட தர்ஷன் மீது மாடல் அழகியும் நடிகையுமான சனம் ஷெட்டி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுவந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் இருந்தபோது நடிகை சனம் ஷெட்டி தான் தான் தர்ஷனின் காதலி என்று அடிக்கடி கூறி வந்தார். அதேபோலத் தர்ஷனுக்கு ஆதரவாக பல்வேறு வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார்.

-விளம்பரம்-

தர்ஷன் சனம் சர்ச்சை :

இந்த நிலையில் தர்ஷன் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தங்கள் இருவருக்கும் தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பாகவே நிச்சயதார்த்தம் கூட முடிந்துவிட்டது என்று சனம் ஷெட்டி ஆதாரங்களை வெளியிட்டார். மேலும், பேட்டியில் பங்கேற்ற தர்ஷன், சனம் ஷெட்டி ரம்யா – சத்யா திருமணத்தின் போது அவரது முன்னாள் காதலருடன் ஒன்றாக இருந்ததாக கூறி இருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : சிறு வயதிலேயே பாதித்த அறிய வகை நோய் – செல்வராகவனுக்கு செயற்கை கண் பொருத்தப்பட்ட காரணம் பற்றி தெரியுமா ?

சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் அஜய் :

இந்த நிலையில் சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் நடிகர் அஜய் வாண்டையார் இதுகுறித்து பேட்டியில் பேசி இருந்தார். அதில் எனக்கு சனம் ஷெட்டியை 6 வருசமாக தெரியுமா 3 வருடமாக காதலித்தோம் ஆனால், 2 வருடமாக நாங்கள் பேசிக்கொள்வது இல்லை. நாங்கள் இருவரும் பிரிந்த போது கூட சண்டை கூட போடவில்லை. இருவரும் நன்றாக பேசிவிட்டு முடிவெடுத்த தான் பிரிந்தோம். அன்று சத்யாவின் திருமணத்தின் போது தான் சனமை மீண்டும் பார்த்தேன்.

-விளம்பரம்-

சனம் குறித்து அஜய் :

பின்னர் இருவரும் சாதாரணமாக பேசிகொண்டு நண்பரை ஷேர் செய்து கொண்டோம். மேலும், தர்ஷன், நாங்கள் இருவரும் தனியாக இருந்தது போல சொன்னார். அன்று இரவு பங்ஷனை முடித்து விட்டு கில்டன் ஓட்டலுக்கு சென்றோம். அந்த ஹோட்டலை கூட சத்யா தான் புக் செய்து இருந்தார். ஆனால், அங்கு நாங்கள் மட்டும் தனியாக போகவில்லை அதே ஹோட்டலில் 20 பேர் மேல் ஒன்றாக தான் தங்கினோம். அதன் பின்னர் இரவு 2 மணி அளவில் நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

அஜய்க்கு பிறந்த குழந்தை :

நாங்கள் காதலித்தது உண்மை தான் ஆனால், தர்ஷனை காதலித்த பின்னர் நாங்கள் இருவரும் பேசிக்கொள்வதே இல்லை என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தான் சனம் ஷெட்டி பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த சீசனில் இவருக்கும் பாலாஜி முருதாசுக்கும் ஏகப்பட்ட சண்டைகள் வெடித்தது. அதற்கு முக்கிய காரணமே பாலாஜி முருகதாஸ், அஜய் வாண்டையாரின் நெருங்கிய நண்பர் என்பதால் தான். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பிறந்த அஜய் வாண்டையாரின் குழந்தையை நேரில் சென்று பார்த்து இருக்கிறார் பாலாஜி.

அஜய் குழந்தையை சந்தித்த பாலாஜி :

அஜய் வாண்டையார் திருமணம் செய்து கொண்ட அபூர்வா வேறு யாரும் இல்லை மைக் செட் ஸ்ரீராம் நடனமாடி வெளியிட்ட ‘சிங்காரி’ பாடல் மூலம் பிரபலமானவர் தான் அபூர்வா. அபூர்வாவுக்கு 2021 செப்டம்பர் மாதம் அஜய் வாண்டையாருடன் திருமணம் நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் தான் அபூர்வாவிற்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. தனது நண்பர் அஜய் வாண்டையாரின் குழந்தையை நேரில் சென்று பார்த்து அவருக்கு ஒரு தங்க மோதிரத்தை போட்டுவிட்டுள்ளார் பாலாஜி முருகதாஸ்.

Advertisement