வெறும் போஸ் மட்டும் தான், படம் ஒன்னும் காணும் – கேலி செய்த ரசிகர்கருக்கு சனம் ஷெட்டியின் எமோஷனல் பதில்.

0
2715
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல போட்டியாளர்கள் இருந்தனர். அதில் சனம் ஷெட்டியும் ஒருவர். அதே போல மற்ற போட்டியாளர்களின் வெளியேற்றத்தை சனம் ஷெட்டியின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சனம் ஷெட்டி வெளியேறியதையடுத்து ட்விட்டரில் சனம் ஷெட்டி ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் கூட வந்தது.

இதையும் பாருங்க : அம்மா உணவகத்தில் தான் சாப்பிடுறேன், அதான் இப்படி ஆகிட்டேன் – துள்ளுவதோ இளமை பட நடிகரின் பரிதாப நிலை.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சனம் ஷெட்டி பெரிதாக பேட்டிகளில் பங்கேற்கவில்லை. அதே போல சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்த போது, தான் இதுவரை 25 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறேன் ஆனால், எனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறி இருந்தார் சனம். இப்படி ஒரு நிலையில் இவர் 2017 ஆம் ஆண்டு டிக்கெட் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் ப்ரோமோ சமீபத்தில் தான் வெளியானது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சனம் வேறு எந்த படத்தின் அறிவிப்பையும் வெளியிடவில்லை. இப்படி ஒரு நிலையில் சமீபித்தல் சனம் ஷெட்டி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர், வெறும் போஸ் மட்டும் தான். எந்த படமும் இல்லை என்று கேலி செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த சனம், தம்பி கேள்வி கேக்கறது ரொம்ப ஈஸி ஆனா, என்ன பதில் சொல்றது. நல்ல படம் வந்தா நான் பண்ண மாட்டேனே ? என்று பதிவிட்டு வரும், வெயிட் பண்ணுங்க, நடிகைகளின் சோதனைகள் என்று ஹேஷ் டேக்கை போட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement