விஜய் பேர யூஸ் பண்னேனா ? விஜய் ரசிகர்கள் எனக்கு ஓட்டு போடயா ? பிக் பாஸுக்கு பின் விஜய் குறித்து முதன் முறையாக பேசிய சஞ்சீவ்.

0
463
sanjeev
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலமாக திகழ்பவர் சஞ்சீவ். இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன் வெள்ளித்திரையில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் தளபதி விஜய் உடன் சேர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். அதோடு பழம்பெரும் நடிகை மஞ்சுளாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. பின் சஞ்சீவுக்கு சினிமாவில் வரவேற்பு குறைந்தவுடன் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். இவர் சின்னத்திரையில் திருமதி செல்வம், கண்மணி, யாரடி நீ மோகினி போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-
sanjeev

மேலும், சஞ்சீவ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் நண்பன் விஜய் உடன் சேர்ந்து மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த படத்திற்கு பிறகு இவர் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக நுழைந்தார். பிக்பாஸ் வீட்டில் எல்லோரும் சச்சரவு, சண்டை என பல பிரச்சனைகளில் சிக்கி இருந்தாலும் சஞ்சீவ் எதிலும் மாட்டாமல் கவனமாக விளையாடி வந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் சஞ்சீவ்:

இதனால் இவருக்கு இன்னும் ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. அதுமட்டுமில்லாமல் சஞ்சீவ் எல்லோருக்கும் நியாயமாகவும், பொறுமையுடனும் விளையாடி வந்தார். சஞ்சீவ் கண்டிப்பாக டாப் 3ல் வருவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், இவர் டாப் 5 வருவதற்கு முன்னே வெளியேறி விட்டார். இந்நிலையில் சஞ்சீவ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும், விஜய் குறித்தும் கூறியிருப்பது, நான் பிக் பாஸ் வீட்டுக்குள் எதுக்கு போனேனோ, அதை அடைந்து விட்டேன்.

சஞ்சீவ் அளித்த பேட்டி:

எல்லோரும் என்னை செல்வம், விஜயோட நண்பர் சஞ்சீவ்வாக தான் பார்த்தார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சி மூலம் என்னை எல்லோரும் சஞ்சீவாக பார்க்கிறார்கள். எனக்கு விஜய்யோட நண்பன் என்ற பெயர் இருப்பதில் பெருமை தான். இருந்தாலும் நமக்கு என்ற ஒரு அடையாளம் வேண்டும். அதற்காகத் தான் நான் உள்ளே போனேன். இப்போ எல்லோருமே பிக் பாஸ் சஞ்சீவ் என்று சொல்லுகிற அளவுக்கு எனக்கு மக்கள் மத்தியில் நல்ல இடம் கிடைத்திருக்கிறது. எதை நினைத்து நான் உள்ளே சென்றேனோ, அதை அடைந்தது நினைத்து சந்தோசமாக இருக்கிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சஞ்சீவ் சொன்னது:

அதே மாதிரி உள்ள போகும் போது பல திட்டங்களோடு இப்படியெல்லாம் விளையாடனும் என்று யோசித்து தான் போனேன். ஆனால், உள்ளே நுழைந்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஒரு மேஜிக் மாதிரி எல்லாமே மறந்து விட்டது. நாம் என்ன தான் பிளான் பண்ணி போனாலும் உள்ளே எல்லாமே மறந்திடும். ஒரு நாள் முழுக்க கேமரா இருக்கிறது என்று நம்ப கவனமாக இருந்தாலும் தூங்கி எழுந்த அடுத்த நாளே நம்முடைய வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவோம். அதனால் நம்ம எந்த ஒரு திட்டமும், ஜாக்கிரதையாகவே விளையாட முடியாது. அது போக்கில் தான் விளையாட முடியும். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு நினைத்தால் பெருமையாக சந்தோஷமாக இருக்கிறது.

சஞ்சீவிடம் விஜய் சொன்னது:

அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தவுடன் விஜய்யிடம் சொன்னேன். முதலில் சிரித்தான், சிரிச்சிட்டு பிக் பாஸுக்கு நீ உள்ளே போறியா, உள்ள போயி சமாளிச்சுருவியா? ஆமா, நீ என்ன பண்ணுவ? என்று சொல்லி என்கரேஜ் பண்ணான். பின் சரி, பாத்துக்கோ ஆல் தி பெஸ்ட், போய் ஒரு கலக்கு கலக்கிட்டு வா என்று சொன்னார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் விஜய், உள்ள போகும் போது எப்படி போனியோ வெளியில் வரும்போது எந்த டேமேஜ் இல்லாமல் நல்ல பெயரோடு தான் வெளியில் வந்திருக்க. எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு. நீ பிக் பாஸ் வீட்டுக்குள் போனதிலிருந்து நானும் ரெகுலரா பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்க ஆரம்பித்துவிட்டேன் என்று கூறி இருந்தார்.

Advertisement