தன்னைத்தானே டைட்டில் வின்னராக அறிவித்துக்கொண்ட விக்ரம் – கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.

0
430
- Advertisement -

பிக் பாஸ் சரவணன் விக்ரமை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வரும் பதிவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 38 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டு இருக்கிறது. அதேபோல் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். பின் கடந்த சனிக்கிழமை பிரதீப் Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார். காரணம், பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல்.

- Advertisement -

சரவணா விக்ரம் குறித்த தகவல்:

ஆனால், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் பரீச்சயமான நபர்களில் ஒருவர் சரவணன் விக்ரம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். தற்போது சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிவடைந்தது. அதோடு இவர் சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக இருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்.

பிக் பாஸ் 7:

இவர் மீது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்போடு இருந்தார்கள். ஆனால், நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து இப்போது வரை சரவணன் பெரிதாக எந்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் செய்யவில்லை. மற்ற போட்டியாளர்கள் சண்டை போட்டாலும் கூட அதில் அவர் ஈடுபடவும் இல்லை, கமெண்ட்ஸ் சொல்வதும் இல்லை. அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துவிட்டு வந்து விடுகிறார். இதனாலே பிக் பாஸ் ரசிகர்கள் இவரை கிண்டலடித்து விமர்சித்திருந்தார்கள். டாக்கில் கூட இவர் பெரிதாக ஈடுபாடுடன் செய்வதில்லை.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் சரவணா விக்ரம்:

பின் சில தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா உடன் நடந்த சண்டையில் சரவணன் விக்ரம் பேசியிருக்கிறார். அதற்கு அர்ச்சனா, இதுவரையும் நீங்கள் எதுவுமே சொல்லவில்லை. இப்போது மட்டும் எதற்கு கேள்வி கேட்கிறீர்கள்? இதற்கு முன்பு என்ன செய்தீர்களோ அதே செய்யுங்கள்? என்று சொல்கிறார் உடனே விசித்திரா, நீ போன வாரமே நாமினேட் ஆகியிருப்பாய். இன்னும் ஒரு சில வரம் தான் நீ இருப்பாய். அதற்குள் நல்ல ஜாலியாக இரு என்று சொல்லிவிடுகிறார்.

நெட்டிசன்கள் கிண்டல்:

இருந்தாலும், இவர் ஏதாவது ஒன்று செய்யணும் என்று பூர்ணிமா- ஐசு உடன் நெருக்கமாக பழகி வருகிறார். இவர் இருவரையுமே காதலிப்பது போல காண்பிக்கிறார்கள். ஆனால், பூர்ணிமா- ஐசு இருவரும் சரவணன் விக்ரமை ஒரு காமெடி பீஸ் ஆக பார்க்கிறார்கள். இந்த நிலையில் சரவணன் விக்ரம், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி யின் டைட்டில் வின்னர் சரவண விக்ரம் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் கேலிக்குள்ளாகி இருக்கிறது. இதை பார்த்த பலருமே, இதெல்லாம் ஓவராக இல்லை. நீ டைட்டில் வின்னரா? உனக்கு இது தேவையா? என்றெல்லாம் கிண்டல் அடித்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement