உயிர் உலகத்தின் முதல் ஓணம் பண்டிகை – விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம்

0
1000
- Advertisement -

உயிர் உலகத்துடன் முதல் ஓணம் பண்டிகை கொண்டாடி விக்னேஷ் சிவன்- நயன்தாரா வெளியிட்டிருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

-விளம்பரம்-

அந்த வகையில் கடந்த ஆண்டு நயன் நடிப்பில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த படம் O2, கோல்ட், காட்ஃபாதர். இந்த படங்கள் எல்லாம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து கடைசியாக நயன் நடிப்பில் வெளிவந்த படம் கனெக்ட்.

- Advertisement -

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்:

இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை தான் பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நயன் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பில் உள்ள படம் ஜவான். இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். செப்டம்பர் மாதம் இந்த படம் வெளியாக இருக்கிறது. இதனை அடுத்தும் சில படங்களில் நயன் கமிட்டாகி இருக்கிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது.

விக்னேஷ் சிவன்- நயன்தாரா இரட்டை பிள்ளைகள்:

இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்கள். மேலும், இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதாக ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். பின் இருவரும் தங்கள் இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். மேலும் தங்கள் ஒரு பிள்ளைகளுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன் என்றும் மற்றொரு பிள்ளைக்கு உலக் தெய்வீக் என் சிவன் என்றும் பெயர் வைத்துள்ளனர்.

-விளம்பரம்-

குழந்தைகள் புகைப்படம்:

இதனை அடுத்து கடந்த ஜூன் மாதம் தான் தங்களின் முதலாம் ஆண்டு திருமண நாளை தனது மகன்களுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் கொண்டாடி இருந்தார்கள். அது தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. மேலும், விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் தங்கள் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அடிக்கடி சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.

ஓணம் பண்டிகை வாழ்த்து:

இந்த நிலையில் தங்களுடைய இரண்டு மகன்களுடன் சேர்ந்து விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் ஓனம் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இது தொடர்பாக விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், என்னுடைய உலகம், உயிர் உடன் முதல் ஓணம் பண்டிகை என்று பதிவிட்டு எல்லோருக்கும் ஓனம் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டார்களா என்று புகைப்படத்திற்கு லைக் குவித்து வருகிறார்கள்.

Advertisement