ஓவியா பிக்பாஸ் 2 போட்டியாளரா..? சிக்கியது ஆதாரம்! புகைப்படம் உள்ளே!

0
662
oviya-bigg-boss

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிர பலமடைந்தவர் ஓவியா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது இயல்பான குணத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அபிமான போட்டியளராக இருந்து வந்தார்.

oviya

மேலும், இவரின் ரசிகர்கள் இவருக்கென்று ஓவியா ஆர்மி என்று கூட கூட்டம் சேர்ந்தது. சொல்லபோனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பின்னரே ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார் என்று கூட கூறலாம்.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை ஓவியா மேடையில் தோன்றி ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படடூத்தினர். ஆனால், அவர் தற்போது நடந்து வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்க போகிறாரா அல்லது ஒரு விருந்தினராக பங்கேற்க போகிறாரா என்று தெரியவில்லை. எது எப்படியோ கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா பாதியிலேயே சென்று விட்டார். தற்போது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளது அவரது ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தார்.

oviya

இருப்பினும் அவர் இந்த சீசனில் போட்டியாளரா என்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பாட்டுள்ளது.ஆனால் அந்த டீசரில் ஓவியாவின் கையில் ஒரு வாட்ச் இருப்பது நமக்கு தெளிவாக தெரிகிறது.பிக் பாஸ் விதிப்படி வாட்ச் அணிந்து போட்டியாளர்களை உள்ளே அனுமதிக்கமாட்டார்கள் என்பதால் ஓவியா தற்போது விருந்தினராக தான் வந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.அவர் 7 நாட்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருப்பர் என்ற தகவல் உறுதியாகியுள்ளது.