பிக் பாஸ் 4-ல் புகழ் பங்குபெறுவாரா? அவரே சொன்ன பதில் இதோ.

0
10505
pugal
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சில தினங்களுக்கு முன்பு தான் வெற்றிகரமாக முடிவடைந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க சமையல் நிகழ்ச்சி. சமையல் நிகழ்ச்சி என்றால் மற்ற நிகழ்ச்சிகளை போல அனைவரும் சமையல் தெரிந்து வந்து செய்வது கிடையாது. சமையல் தெரிந்தவர்களுடன் சமையல் செய்ய தெரியாதவர்கள் இணைந்து செய்யும் நிகழ்ச்சி. விஜய் டிவி இந்த முறை சமையல் நிகழ்ச்சியில் ஒரு புது மாதிரியான அட்ராசிட்டியை கொண்டு வந்து இருந்தது. இந்த நிகழ்ச்சியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கேட்டு வருகின்றனர். தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங்கில் இந்த நிகழ்ச்சி தான் உள்ளது.

-விளம்பரம்-
Image result for cooku with comali pugal

ட்ரெண்டிங்கில் இந்த நிகழ்ச்சி இருப்பதற்கு முக்கிய காரணம் நிகழ்ச்சியில் இருக்கும் கோமாளிகள் தான். இவர்கள் செய்யும் கோமாளித்தனத்திற்கு அளவே இல்லை. அதோடு இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் வைரல் ஆனதற்கு முக்கிய காரணம் புகழ். மேலும், இந்த நிகழ்ச்சியை புகழுக்காகவே பார்க்கின்ற ஒரு கும்பலும் உள்ளது. தற்போது குக் வித் கோமாளியின் செலிபிரிட்டி ஆக சோசியல் மீடியாவில் வலம் வந்து கொண்டு இருக்கிறார் நம்ம புகழ். புகழின் சொந்த ஊர் கடலூர். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் சென்னைக்கு வேலை தேடி வந்துவிட்டார். புகழ் சென்னையில் பார்க்காத வேலைகளே இல்லை.

- Advertisement -

இதையும் பாருங்க : பள்ளியில் அஜித் என்ற பையனால் என் தங்கச்சி மிகவும் சிரமப்பட்டாள். பிரபல நடிகர் பேட்டி.

சென்னையில் வேலை செய்யும்போது பல கஷ்டங்களையும், பல பிரச்சனைகளையும் புகழ் அனுபவித்துள்ளார். முதலில் இவர் கலக்கப்போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் லேடி கெட்டப் மூலம் தான் எனக்கு மக்கள் மத்தியில் பிரபலமானார். அப்படியே அது இது எது, சிரிச்சா போச்சு என்று பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் புகழ் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் தொகுப்பாளர் நீங்கள் பிக் பாஸ் எப்ப வருவீங்க?? அடுத்த பிக் பாஸ் சீசனில் நீங்கள் தான் வர போகப் போகிறீர்கள் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டு உள்ளார்.

-விளம்பரம்-

அதற்கு புகழ் கூறியது, ஏன், நல்லாத்தானே போய்ட்டு இருக்கு. நான் இப்படியே இருக்கிறேன். மக்கள் கோமாளியாவே என்னை பார்க்கட்டும். பிக் பாஸ் எல்லாம் வேண்டாம். என்னை தூக்கி உள்ளே போட்டு அதுக்கப்புறம் தேவையில்லாமல் என்னாத்துக்கு இது எல்லாம். கோமாளி ஆர்மி தொடங்குங்கள் பிக்பாஸ் ஆர்மி எல்லாம் வேணாம். நிறைய நான் பார்க்கிறேன். நம்ம இப்ப இருக்கிற மாதிரி தான் உள்ளேயும் இருப்போம். ஆனால், ஒரு சின்ன சின்ன விஷயம் தான் தேவையில்லாத பிரச்சனை கிளப்புகிறது. என்னை பொறுத்த வரை எப்போதும் மக்களை நான் சிரிக்க வைக்க வேண்டும். யாரையும் கஷ்டப்படக் கூடாது அதற்காகத்தான் நான் வேண்டாம் என்று சொல்கிறேன் என்று கூறினார்.

Advertisement