நெனச்சது ஒன்னு நடந்தது ஒன்னு. பிக் பாஸ் ஷெரின் வருத்தத்துடன் போட்ட பதிவு.

0
1529
- Advertisement -

கன்னட திரையுலகில் 2002-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘போலீஸ் டாக்’. இந்த படத்தில் ஹீரோயினாக ஷெரின் நடித்திருந்தார். இது தான் நடிகை ஷெரின் அறிமுகமான முதல் கன்னட திரைப்படமாம். இதனைத் தொடர்ந்து ‘துருவா’ என்ற கன்னட படத்தில் நடித்தார் நடிகை ஷெரின். அதன் பிறகு கன்னட திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை ஷெரின், அடுத்ததாக தமிழ் திரையுலகிலும் நுழையலாம் என முடிவெடுத்தார்.

-விளம்பரம்-

தமிழ் திரையுலகில் தனுஷ் நடித்த முதல் திரைப்படம் ‘துள்ளுவதோ இளமை’. இந்த படத்தினை இயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கியிருந்தார். இதில் தனுஷுக்கு ஜோடியாக ஷெரின் டூயட் பாடி ஆடியிருந்தார். இது தான் ஷெரின் தமிழ் சினிமாவில் என்ட்ரியான முதல் திரைப்படமாம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

இதையும் பாருங்க : என்ன எப்படியெல்லாம் திட்றாங்க பாருங்க. லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்ட ஸ்க்ரீன் ஷாட் மற்றும் வீடியோ.

- Advertisement -

‘துள்ளுவதோ இளமை’ படத்துக்கு பிறகு ரம்யா கிருஷ்ணனின் ‘ஜெயா’, சிபிராஜின் ‘ஸ்டுடண்ட் நம்பர் 1’, விக்ரமாதித்யாவின் ‘விசில்’, சிம்ரனின் ‘கோவில்பட்டி வீரலட்சுமி’, நந்தாவின் ‘உற்சாகம்’, உதயாவின் ‘பூவா தலையா’ என அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடித்தார் நடிகை ஷெரின். கன்னடம், தமிழ் மட்டுமின்றி சில தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் நடிகை ஷெரின்.

கடைசியாக நடிகை ஷெரின் நடித்த தமிழ் படம் ‘நண்பேன்டா’. உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா ஜோடியாக நடித்திருந்த இந்த படத்தினை இயக்குநர் ஜெகதீஷ் இயக்கியிருந்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ என்ற ரியாலிட்டி ஷோவின் சீசன் 3-யில் நடிகை ஷெரினும் ஒரு போட்டியாளராக இருந்தார். ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவிற்கு பிறகு நடிகை ஷெரினுக்கு ரசிகர்கள் அதிகமானார்கள்.

-விளம்பரம்-

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை ஷெரின் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். அந்த பதிவில் “இந்த 2020-ஆம் ஆண்டு எப்படியெல்லாம் இருக்கப்போகிறது என்று நான் கற்பனை செய்தது ஒன்று.. ஆனால், இப்போது அதற்கு முற்றிலும் மாறாக நடப்பதெல்லாம் ஒன்றாக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement