என்ன எப்படியெல்லாம் திட்றாங்க பாருங்க. லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்ட ஸ்க்ரீன் ஷாட் மற்றும் வீடியோ.

0
8554
Jyothika

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஜோதிகா. சமீபத்தில், ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா பேசுகையில் “கோவில்களுக்கு நிதியுதவி மூலமும், உண்டியலில் காசு போடுவதன் மூலமும் செலவழிப்பதற்கு பதிலாக மருத்துவமனைகளுக்கும், பள்ளிகளுக்கும் அப்பணத்தை செலவு செய்து உதவுங்கள்” என்று கூறியிருந்தார்.நடிகை ஜோதிகா பேசியிருந்த இந்த விஷயம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சிலர் நடிகை ஜோதிகாவின் பேச்சிற்கு ஆதரவாகவும், பலர் அவருக்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவித்த வண்ணமுள்ளனர்.

Image

இது தொடர்பாக பிரபல நடிகையும், இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். அந்த பதிவில் “ஏன் இந்த அளவிற்கு நடிகை ஜோதிகாவிற்கு எதிராக பேசி வருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.

- Advertisement -

அவர் அன்று மேடையில் பேசிய பேச்சை முழுவதும் நானும் கேட்டேன். அவர் பேசியவை மிக சரியான ஒரு விஷயம். அவர் யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பேசவே இல்லை. இந்த ‘கொரோனா’ லாக் டவுன் சூழ்நிலையிலும், சில பாடங்களை கற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். ஜோதிகா எந்த ஒரு மதத்தையும் பற்றி பேசவே இல்லை, ஆனால், ஒரு சிலர் இதை மத அரசியலாக மாற்றுகிறார்கள்.

ஜோதிகா பேசியதில், உண்மையான சமூக அக்கறை மட்டுமே இருந்தது. அப்படியே அவரது பேச்சு சிலரை காயப்படுத்தியிருந்தால், அதை மிக நாகரீகமாக சொல்லியிருக்க வேண்டும். அப்படி சொல்லியிருந்தால் கண்டிப்பாக ஜோதிகாவும் அவர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பு கொடுத்திருப்பார்” என்று லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

ஜோதிகாவிற்கு ஆதரவாக லக்ஷ்மி ராமகிருஷ்ணன் குரல் கொடுத்தமையால் அவரை அவதூறாக பேசி பலர் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் போட்டு வருகின்றனர். அதில் ஒருவர் ரொம்பவும் தகாத வார்த்தையில் ஒரு ஸ்டேட்டஸ் பதிவிட்டிருந்தார். அந்த நபருக்கு பதில் சொல்லும் விதமாக லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ பதிவில் “அந்த கடவுளே வந்தாலும் உங்களை எல்லாம் காப்பாற்ற முடியாது. ஒரு பெண்ணை பற்றி எவ்வளவு அவதூறாக பேசுறீங்க. உங்க வீட்ல எல்லாம் பெண்கள் இல்லையா. எவ்வளவு நேரம் வேணும் எனக்கு, நான் ஸ்க்ரீன்ப்ளே நன்றாக எழுதுவேன். எழுதவா..

ஆனால், நான் அப்படி பண்ண மாட்டேன்.. ஏன்னா நாகரீகம் எனக்கு சொல்லி கொடுத்திருக்காங்க.. என்ன cultured-ஆ வளர்த்திருக்காங்க.. principled-ஆ வாழ்ந்துட்டு இருக்கோம்.. உங்களுடைய ஸ்க்ரீன்ப்ளேவுக்கு கீழே நிறையே பேர் கமெண்ட்ஸ் போட்டிருந்தாங்களே.. அவங்களோட ஃபேஸ்புக் பக்கங்களில் சென்று பார்த்தேன். என்னை மாதிரி நிறைய மாமிஸ் இருக்காங்க..

மடிசாரெல்லாம் கட்டிட்டு, அவங்களை எல்லாம் எங்கிருந்து இறக்குமதி செய்தீர்கள்? பாம்பேவிலிருந்தா, கல்கத்தாவிலிருந்தா? இல்ல மொரோக்கோவிலிருந்தா? அப்புறம் இங்க கூட்டிட்டு வந்து மடிசார் கட்டி விட்டுட்டீர்களா? எங்களுக்கும் தெரியும், நீங்க பண்ணுவது போல் பண்ணுவதற்கு.. ஆனால், நான் சொன்னேன்ல நாகரீகம்.. culture.. முதல்ல பகவத்கீதாவையும், இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் நல்லா படிச்சு அர்த்தத்தை புரிஞ்சுக்கோங்க.. அதுக்கப்புறம் ஹிந்துத்துவாவை காப்பாத்தலாம்.. நாம எல்லோருமே சேர்ந்தே காப்பாத்தலாம். சரியா” என்று லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

Advertisement