விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சின் மூன்றாவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் நடிகை ஷெரின். இவர் மாடல் அழகியாக இருந்து பின்னர் திரையுலக நடிகையுமானர். ஷெரின் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமா துறைக்கு ‘தர்ஷன்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானர். ஆனால் தமிழ் திரை உலகிற்கு தனுசின் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானர்.
துள்ளுவதோ இளமை படத்திற்கு பின்னர் விசில், உற்சாகம் போன்ற பல படங்களில் நடித்தாலும் இவரால் முன்னணி நடிகையாக வளம் வர முடியவில்லை. பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ,பீமா படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன் பின்னர் நண்பேன்டா படத்தில் சந்தானத்தின் மனைவியாக நடித்தார் ஷெரின்.
இதையும் பாருங்க : புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபலம் யாருனு தெரியுதா? தலைக்கும் இவருக்கும் ஒரு தொடர்பு இருக்கு.
இடையில் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த ஷெரின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமடைந்தார். பிக் பாஸ் வீட்டில் நடிகை ஷெரின் அனைவரின் மனதிலும் ஏஞ்சல் என்ற இடத்தை பிடித்தார். தற்போது தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடையே அதிக வரவேற்பையும், ஆதரவையும் பெற்றார்.
செரின் வாழ்வில் மிகப்பெரிய அளவில் யாருக்கும் நடக்காத கொடுமையான சம்பவங்களும் நடந்துள்ளது. செரின் அப்பா மூன்று வயதிலேயே அவரை விட்டுட்டு போய் விட்டார் என்ற தகவல் அனைவர்க்கும் தெரிந்தது . அதோடு ப்ரிஸ் டாஸ்கில் செரின் தன் அம்மாவிடம்,எனக்கு அப்பா இருந்தால் நல்லா இருக்குமே? என்று ஏக்கத்துடனும் மன குமறலுடன் கேட்டது ரசிகர்கள் மனதை பதற வைத்தது.
இதையும் பாருங்க : அவருக்கு அஞ்சலி செலுத்தக்கூட போக முடியலை, அஸ்தியை கூட கரைக்க முடியல – நடிகை ரூபினி ஆதங்கம்
இந்த நிலையில் நடிகை ஷெரின் தனது தந்தை மற்றும் தாயுடன் சிறு வயதில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கும் ஒரே புகைப்படம் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் ஷெரின். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.