புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபலம் யாருனு தெரியுதா? தலைக்கும் இவருக்கும் ஒரு தொடர்பு இருக்கு.

0
175529
venkatprabhu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் வெங்கட் பிரபுவும் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளர்களில் ஒருவரான கங்கை அமரன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடதக்கது. இயக்குனர் வெங்கட் பிரபு படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த அளவிற்கு தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-
Venkat Prabhu with his Mother | Venkat prabhu, Cinema, Photo

- Advertisement -

இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், பின்னணிப் பாடகர், திரைக்கதையாசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் 2007ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ‘சென்னை 600028’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் முதன் முதலாக 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான வெங்கட் பிரபு அவர்கள் தற்போது சோசியல் மீடியாவில் தன்னுடைய சிறு வயது புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் வெங்கட் பிரபு அவர்கள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருடன் நின்றிருக்கிறார்.

Venkat Prabhu is a cop with a plan | Tamil Movie News - Times of India

தற்போது இந்த புகைப்படத்தை இவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் நம்ம இயக்குனர் வெங்கட் பிரபுவா? என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள். மேலும், அந்த புகைப்படத்தை ரசிகர்கள் லைக் செய்தும் ஷேர் செய்தும் வருகிறார்கள்.

தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் மாநாடு. கடந்த வருடம் இந்த மாநாடு படம் குறித்து நடந்த பிரச்சனை அனைத்தும் தெரிந்ததே. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் சிம்பு அவர்கள் முதல் முறையாக முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரித்து உள்ளார்.

Advertisement